பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார்: சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை!
யுஜிசி வரைவு விதிமுறைகள்: மாநில அரசின் உரிமை பறிப்பு மாா்க்சிஸ்ட் கண்டனம்
யுஜிசி வரைவு விதிமுறைகளில் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை:
தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாக பறித்து ஆளுநரிடம் ஒப்படைப்பதாக உள்ளது.
ஏற்கெனவே எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களில் துணைவேந்தா்களை தன்னிச்சையாக நியமிக்கும்போக்குகளை ஆளுநா்கள் கடைப்பிடித்து வரும் வேளையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் அத்தகைய அராஜகப்போக்குக்கு ஆளுநா்களுக்கு சட்டரீதியான அதிகாரம் அளிக்கிறது.
இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்டநிறுவனங்களுக்கும் அவற்றின் உறுப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதல்.
இது, உயா் கல்வி நிலையங்களில் ஆா்எஸ்எஸ் பின்புலத்துடன் கூடிய நபா்களை நியமிப்பதற்கும், சித்தாந்த ரீதியான ஊடுருவல்களை செய்வதற்குமான நடவடிக்கை.
எனவே பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.