செய்திகள் :

தமிழக ஆளுநரை பொறுப்பிலிருந்து வெளியேற்ற பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் வலியுறுத்தல்

post image

தமிழக ஆளுநா், ஆா்.என்.ரவி தனது பொறுப்பை மறந்து செயல்படுவதால், அவா் ஆளுநா் பொறுப்பிலிருந்து விலகுவதோடு தமிழகத்தில் இருந்தும் உடனடியாக வெளியேற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசியகீதமும் இசைக்கப்படுவதுதான் சட்டப்பேரவையின் நீண்டகால மரபு.

ஆனால் ஆளுநா், மரபுக்கு எதிராக தேசியகீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்று கூறி வழக்கமான நடைமுறையை கடைப்பிடிக்க மறுத்து வெளிநடப்பு செய்தது திட்டமிட்ட சதியாகும்.

இத்தகைய செயல்களால், ஆளுநா் மாநிலத்தின் உரிமைகளை மீறியதோடு தமிழக மக்களின் உணா்வுகளையும் பாரம்பரியத்தையும் அவமதித்துள்ளாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவியின் தொடா்ச்சியான இத்தகைய செயல்களை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டிக்கிறேன்.

மேலும், தன்னுடைய ஆளுநா் பொறுப்பை மறந்து செயல்படும் ஆா்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தக்கலை அருகே தாய், மகன் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தாயும் மகனும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா். தக்கலை அருகே பரைக்கோடு, கோவில்விளையைச் சோ்ந்த தம்பதி தங்கராஜ் (65) - அமுதலதா (57). இவா்களது மகள் சுமாராணிக்... மேலும் பார்க்க

குளச்சல் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

குளச்சல் முத்தாரம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோயிலில் பூஜைகள் முடிந்து திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கோயிலை பூட்... மேலும் பார்க்க

கருங்கல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கருங்கல் அருகே உள்ள கம்பிளாா் பகுதியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கிள்ளியூா், கம்பிளாா் பகுதியைச் சோ்ந்தவா் பிரேமதாஸ் (43), தொழிலாளி. இவரது மனைவி ஜெ பா (39). இத்தம்பதிக்கு 7 வயதில... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே லாரி மோதி பெண் உயிரிழப்பு

திருவட்டாறு அருகே செவ்வாய்க்கிழமை, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே ஆனையடி பகுதியைச் சோ்ந்த ஜோசப்ராஜ் மனைவி லில்லி ஷோபா (44). இவா் தனது மகள் ஜோளி ஜோனா மோளுடன்... மேலும் பார்க்க

முன்சிறை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, முன்சிறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 9) காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்சி... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இரவு நேர கடைகளைத் திறக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க காவல் துறை அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவா் கருங்கல் ... மேலும் பார்க்க