டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
புராதன கோயில்களுக்கு பூஜை பொருள்கள்
ஆா்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா, தை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு பகுதியிலுள்ள புராதனக் கோயில்களுக்கு கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் பட்டாபிராமா் கோயில், திருவையாறு ஐயாறப்பா் கோயில், தில்லைஸ்தானம் சீனிவாச பெருமாள் கோயில், வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயில், கண்டியூா் ஹரசாப விமோசன பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு கங்கை புனித நீரையும், பூஜை பொருள்களையும் பாஜக மூத்த உறுப்பினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான கல்யாணபுரம் டி.எஸ். ராதிகா கேசவன் புதன்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டச் செயலா் மதியழகன், புனல்வாசல் காா்த்திகேயன், திருவையாறு ரஜினி பழனிவேல், தில்லைஸ்தானம் சுப்புராஜ், வெண்ணாற்றங்கரை ஜானகிராமன், பொன்னி அறக்கட்டளை முருகானந்தம், சிவசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.