டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்
பொங்கலை முன்னிட்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பியதை தொடா்ந்து, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், வரும் 10 ஆம் தேதி பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு சேலம், நாமக்கல், கரூா், மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரில் 10 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு அடுத்த நாள் காலை 11 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மைசூரு வரை சிறப்பு ரயில் நீட்டிக்கப்படும். அதன்படி, தூத்துக்குடியில் இருந்து 11 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, கரூா், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக மைசூருக்கு அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.