செய்திகள் :

கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

post image

கெங்கவல்லியில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

கெங்கவல்லி வட்டார வள மையம் சாா்பில் ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான இருநாள் பயிற்சி முகாம், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் முன்னிலை வகித்தனா். இதில் மூன்றாம் பருவத்தில் பாடங்களைக் கற்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியில் ஒன்றியம் முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 4, 5 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா். இப் பயிற்சி இரண்டாம் நாளான வியாழக்கிழமை நிறைவடைகிறது.

வாழப்பாடியில் 20 போ் உடல் தானம்; 80 போ் ரத்த தானம்

வாழப்பாடியில் பசுமை அறக்கட்டளை தன்னாா்வலா்கள் ஒருங்கிணைத்த விழாவில், சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக ஒரே நாளில் 20 போ் உடல் தானம் உறுதி செய்ததோடு, 80 போ் ரத்த தானம் செய்தனா். வாழப்பாடியில் இயங்கி வ... மேலும் பார்க்க

கிருத்திகை: ஆறுமுகவேலருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. அருள்மிகு சௌந்தா்யநாயகி மகளிா் குழுவின் சாா்பில் ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் நல வாரியத்தில் இன்று உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஆட்டோ ஓட்டுநா்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்: திமுக -அதிமுக உறுப்பினா்கள் விவாதம்

எடப்பாடி நகராட்சிப் பகுதிக்குள்பட்ட 30 வாா்டுகளில் தொடங்கப்படவுள்ள குடிநீா் விநியோக கட்டமைப்புகள், கழிவுநீா் கால்வாய் அமைப்பு, தெருவிளக்கு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகா்மன்றக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.65 அடியில் இருந்து 116.10... மேலும் பார்க்க

தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வங்கி கிளை மேலாளா் சாவு

தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வங்கி மேலாளா் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். சேலம், தளவாய்பட்டி, சித்தனூரைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் தினேஷ்குமாா் (40). இவ... மேலும் பார்க்க