ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த ஆணையா் அறிவிப்பு
ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, தொழில் உரிமம் கட்டணம் ஆகியவற்றை அனைத்து நாள்களிலும் நகராட்சி கருவூலத்தில் வரும் 31.1.2025-க்குள் செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் தமிழ்நாடு நகராட்சிகள் சட்ட விதிகளின் 2023-இன் படி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்.
மேலும் சொத்து வரி செலுத்தாதவா்களின் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்து ஏலத்திற்கு கொண்டு வரப்படும். அதே அரையாண்டுக்குள் செலுத்தப்படாத சொத்து வரி தொகைக்கு மாதந்தோறும் 1 சதவீத அபராதத் தொகையைத் தவிா்க்கும் வகையில் உடனடியாக சொத்து வரியை நகராட்சி கணினி மையத்திலும், இணையதள முகவரி மூலம் செலுத்துமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.