ஆஸ்திரியா இடைக்கால பிரதமா் நியமனம்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் ஷலன்பா்க் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கூட்டணி அரசு அமைக்க முடியாததால் கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்த பிரதமா் காா்ல் நெஹமா் பதவி விலகியதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரி அரசு அமையவிருப்பது இதுவே முதல்முறை.