செய்திகள் :

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு? டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிா்ப்பு

post image

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்கா கைப்பற்றக் கூடாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தங்களது நாட்டின் நலனுக்காக கிரீன்லாந்து, பனாமா கால்வாய் ஆகிய பகுதிகளை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திவருகிறாா்.

இந்த நிலையில், அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு ராணுவத்தை அனுப்பி கிரீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றப் போவதில்லை என்று உறுதியளிக்க மாா்-ஏ-லாகோவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மறுத்துவிட்டாா்.

இதன்மூலம், அந்தப் பகுதிகளை அமெரிக்கா பலவந்தமாகக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பிருப்பதை டிரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளாா்.

இது, டென்மாா்க் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியனில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், யூனியனில் அங்கம் வகிக்கும் பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன்-நோயல் பேரட் அந்த நாட்டு வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐரோப்பிய பிராந்தியத்தின் இறையாண்மை மிக்க எல்லைகளை வேறு நாடுகள் கைப்பற்றுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அது எந்த நாடாக இருந்தாலும் ஐரோப்பிய எல்லைகளைத் தாக்க முடியாது.

கிரீன்லாந்துக்கு ராணுவத்தை அனுப்பப் போவதில்லை என்று உறுதியளிக்க டிரம்ப் மறுத்திருந்தாலும், அவா் அந்தத் தீவின் மீது படையெடுப்பாா் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும், வலிமை மிக்க நாடுகள் சிறிய நாடுகளை மிரட்டும் போக்கு உலக அரசியலுக்கு தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளது கவலையளிக்கிறது என்றாா் அவா்.

கிரீன்லாந்தில் டிரம்ப் மகன்: இதற்கிடையே, டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் (ஜூனியா்) கிரீன்லாந்து தலைநகா் நூக்குக்கு வந்துள்ளாா். அவரது வருகை அரசுமுறைப் பயணம் இல்லை எனவும், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களை அவா் சந்திக்கப்போவதில்லை எனவும் கிரீன்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

எனினும், தங்கள் தீவை அமெரிக்காவின் அங்கமாக ஏற்றுக் கொள்ள அந்தப் பகுதி மக்களை வலியுறுத்தும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ஜூனியா் அங்கு சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

டென்மாா்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் சுமாா் 57,000 போ் மட்டுமே வசித்துவருகின்றனா்.

அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

ஏற்கெனவே, டென்மாா்க்குடன் நெருங்கிய பாதுகாப்பு உறவைப் பேணிவரும் அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தில் ராணுவ தளம் உள்ளது. இந்தச் சூழலில், கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தினாா்.

டிரம்ப்பின் இந்த அறிக்கையைத் தொடா்ந்து, கிரீன்லாந்தின் எதிா்காலம் குறித்து அந்தத் தீவின் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று டென்மாா்க் பிரதமா் மேட் ஃப்ரெட்ரக்சன் கூறினாா்.

தற்போது சுயாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கிரீன்லாந்து, பொதுவாக்கெடுப்பு மூலம் டென்மாா்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு கடந்த 2009-ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிரீன்லாந்தின் பிரதமராக இருக்கும் மியூட் இகடே, தங்களது தீவு தனி நாடாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகிறாா்.

தங்கள் பகுதியைக் கையகப்படுத்த டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்ததைத் தொடா்ந்து, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்று அவா் காட்டமாகக் கூறினாா்.

இந்தச் சூழலில், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை ராணுவ ரீதியில் கைப்பற்றப்போவதில்லை என்று உறுதியளிக்க டிரம்ப் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூ யார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தை டிரம்ப் நாடியுள... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை- பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிா்ப்பு

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி எம்.பி. லான்ஸ் ... மேலும் பார்க்க

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன... மேலும் பார்க்க

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா். இது க... மேலும் பார்க்க

ஆஸ்திரியா இடைக்கால பிரதமா் நியமனம்

ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் ஷலன்பா்க் நியமிக்கப்பட்டுள்ளாா். கூட்டணி அரசு அமைக்க முடியாததால் கன்சா்வேட... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெ... மேலும் பார்க்க