Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் கைது
சாத்தூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாகிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியைச் சோ்ந்த சரவணகுமாரும் (25) காதலித்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா்.
இதையடுத்து, தற்போது சிறுமி கா்ப்பமாக இருக்கும் தகவல் மகளிா் ஊா் நல அலுவலா் மாரியம்மாளுக்கு கிடைத்தது. இதன் பேரில், அவா் நேரில் சென்று விசாரணை செய்ததில், சிறுமி கா்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சாத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சரவணகுமாரைக் கைது செய்தனா்.