Haiti: மாந்திரீகத்தால் மகன் இறந்ததாக ஆத்திரம்... 200 பேரைக் கொன்ற நபர்! - என்ன ந...
Sundar Pichai: ``பல புதுமையான ஐடியாக்கள் இந்த இடத்தில்தான் தோன்றியது..'' - சுந்தர் பிச்சை
`2025-ல் கூகுள் தேடல்கள் ஆச்சரியப்பட வைக்க்கும்'
'2025-ம் ஆண்டில் கூகுள் தேடல்கள் உங்களை மிகவும் ஆச்சரியப்பட வைக்கப்போகின்றது' என்று கூகுளின் புதிய அப்டேட்டை பற்றியும், பல விஷயங்களை பற்றியும் பேசியிருக்கிறார் அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை.
இணைய உலகில் 'கூகுள்' என்பது தவிர்க்க முடியாதது. கடக்க முடியாதது. முன்னர், மைக்ரோசாப்டின் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, 'ஏ.ஐ-யில் கூகுள் இயல்பாகவே வெற்றியாளாராக இருந்திருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதுக்குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர் பிச்சையிடம் கேட்கப்பட்டது.
பயனாளர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்
அதற்கு அவர், "ஏ.ஐ என்ற ஆழமான மாற்றத்தின் ஆரம்ப படிகளில் இருக்கிறோம். இன்னும் அதில் பல புதுமைகள் வர உள்ளது. அதனால், அவற்றில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
2025-ம் ஆண்டு கூகுள் எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி பேசும்போது, "2025-ம் ஆண்டு கூகுள் தேடல்களில் பல புதுமைகள் வர உள்ளன. இது பயனாளர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும்.
கூகுள் இன்னும் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற உள்ளது. கூகுளில் வர உள்ள புதுமைகளை 2025-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களிலேயே காணலாம்" என்று கூறினார்.
கிரியேட்டிவிட்டி உருவாகும் இடம்...
கூகுள் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்கப்பட்டப் போது, "கூகுளின் பல புதுமையான ஐடியாக்கள் நிறுவனத்தின் கேண்டீனில் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது தான் உதித்திருக்கிறது. நான் ஆரம்ப கால கூகுள் பணியின் போது, கேண்டீன், யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, யாரையாவது சந்திக்கும்போது, எதை பற்றியாவது நினைத்து ஆச்சரியப்படும்போது தான் கிரியேட்டிவிட்டி உருவாகி இருக்கிறது" என்று பதில் கூறியுள்ளார்.