பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!!
Keerthy Suresh: `நெஞ்சமே நெஞ்சமே!' - கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம்
கீர்த்தி சுரேஷூக்கும் அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.
கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்து பக்கமும் பரிச்சயமான கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் தடம் பதிக்கவிருக்கிறார். அவர் நடித்திருக்கிற `பேபி ஜான்' திரைப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுமட்டுமல்ல இம்மாதம் கீர்த்தி சுரேஷூக்கு கூடுதல் ஸ்பெஷல் ஒன்றும் இருக்கிறது. ஆம், அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை கரம் பிடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷுக்கும் கேராளவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அதை உறுதி செய்து பேட்டியளித்திருந்தார் கீர்த்தி. அதன் பிறகு நவம்பர் 27-ம் தேதி தனது காதலனை அறிமுகப்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
கோவாவில் நடைபெற்ற திருமணத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்காக கோவா செல்வதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்டோரி போட்டிருந்தார். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்கு தயாராகுவதாக `Kitty' என பெயர் கொண்ட உடையை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...