செய்திகள் :

FAMILY படம்: ``சீரியல்ல துணை நடிகையா இருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம் ரொம்பவே பெரிசு" - சுபிக்‌ஷா

post image
’அழுத்தமான வேடத்தில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்’னு என்னைப் பத்தி இந்த வார ஆனந்த விகடன்ல எழுதியிருக்காங்க. சீரியல்கள்ல கூட மெயின் ரோல்ல இல்லாம சப்போர்ட் கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம்கிறது ரொம்பவே பெரிசு’ என்கிறார் சுபிக்‌ஷா.

தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ’Family படம்’ படத்தின் ஹீரோயின்.

சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வீரா’ சீரியலில் துணைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இவரிடம் பேசினோம். ‘’ரியாலிட்டி ஷோ, சீரியல்னு சின்னத்திரையில இருந்துதான் என் கரியரைத் தொடங்கினேன். சீரியல் ஆர்ட்டிஸ்ட்னு அடையாளம் வந்திடுச்சுன்னா பிறகு சினிமா சான்ஸ்ங்கிறது குதிரைக்கொம்புதான். அதுலயும் சீரியல்ல ரொம்பபே பிரபலமான ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாக்கூட சினிமா பக்கம் போறப்ப வரவேற்பே இல்லைங்கிறதுதான் இன்னைக்கு நிலைமை. விதிவிலக்கா விரல் விட்டு எண்ணக்கூடிய ஒண்ணு ரெண்டு பேர் வேணும்னா சினிமாவுல ஒரு லெவலுக்கு வர்றாங்க.

சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் எல்லாருக்குமே சினிமா கனவு நிச்சயம் இருக்கும். ஆனாலும் பெரும்பாலும் வாய்ப்புகள் வராது. ஒருவேளை அப்படி வந்தாலும் அது க்ளிக் ஆகறதுக்குள்ள நாங்க படற பாடு இருக்கே அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

சுபிக்‌ஷா

டிவியில பிரபலமான எத்தனையோ பேர் சினிமா வாய்ப்பு வந்திருக்குனு ஆர்வமா கிளம்பிப் போய் ஏமாந்த கதையெல்லாம் கூட நிறைய கேள்விப்பட்டிருக்கேன். சீரியல்ல நல்ல பேர் வாங்கினவங்களைக்கூட ஊறுகாய் மாதிரி அதாவது கிளாமர் சீனுக்குப் பயன்படுத்திட்டு விட்டதெல்லாம் நடந்திருக்கு. சின்னச் சின்ன வாய்ப்பு கிடைச்சு நடிக்கப் போனவங்களுக்கும் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டுகள்ல கிடைக்கிற மரியாதையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது.

அப்படி ஒரு தடவை சினிமாப் பக்கம் போயிட்டுத் திரும்பி வந்தவங்ககிட்ட உட்கார்ந்து பேசினா சினிமாவை யோசிச்சுப் பார்க்கவே பயமா இருக்கும். 

யதார்த்தம் இப்படியிருக்கையில் எனக்கு இப்படியொரு ஹீரோயின் வாய்ப்பு அமைஞ்சு அந்தப் படம் பத்தி விகடன் நாலு வார்த்தை நல்லவிதமா எழுதியிருக்கிறதை நினைச்சா இது நிஜம்தானான்னு கிள்ளிப் பார்க்கத்தான் தோணுது’’ என்கிற சுபிக்‌ஷா அடுத்ததாக யோகி பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். இந்தப் படமும் அடுத்த சில மாதங்களில் ரிலீசாக இருப்பதாகச் சொல்கிறார்.

’இப்ப நீங்க நடிக்கிற சீரியலும் ஒளிபரப்பாகிட்டிருக்கே. ஒரே சமயத்துல சீரியல், சினிமா ரெண்டுலயும் பயணிக்கறது ஓ.கே.வா’ எனக் கேட்டால்,

சுபிக்ஷா

‘’என்னைப் பொறுத்தவரை ரெண்டுமே நடிப்புதான். கால்ஷீட்ல சொதப்பாம நம்மால் முடிஞ்ச உழைப்பைத் தர்றப்ப நிச்சயம் அதுக்கான பலன் நம்மை வந்து சேரும்னு உறுதியா நம்புறேன்.   

அதனால அது ஒரு பிரச்னை இல்லைனு நினைக்கிறேன்’’ என்கிறார்.

சமீபத்தில் திருமணமான சுபிக்‌ஷா யோகியுடன் நடித்திருக்கும் படத்தையும் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம்.

BB Tamil 8 Day 66: `நான் போகமாட்டேன்' அடம்பிடித்த அன்ஷிதா; வினையாகிப் போன முத்துவின் விளையாட்டு

இந்த சீசனில் எத்தனையோ சுமாரான எபிசோடுகளை எப்படியோ ஒப்பேற்றி எழுதியுள்ளேன். ஆனால் இந்த எபிசோடு இருக்கிறதே.. பயங்கர இழுவை. ஒரு துளி சுவாரசியம் கூட இல்லை. “பிக் பாஸ்.. நான் சுச்சா போறேன்.. எனக்காக ராணவ் ... மேலும் பார்க்க

Serial Update: `நாதஸ்வரம்' கீதாஞ்சலிக்கு பையன்; சுரேந்தர்-நிவேதிதா ஜோடிக்குப் பெண் குழந்தை

திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலில் அவரது முறைப்பெண்ணாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. இவருக்கும் திருமுருகனின் சொந்த ஊரான காரைக்குடிதான்.அந்த சீரியலுக்குப்பிறகு ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 65: `கால்ல கூட விழறேன்' - கலங்கிய தீபக்; அருண் - முத்து - காரசாரமான மோதல்

ஸ்கில், லேபர் என்று எந்த நேரத்தில் தீபக் சொன்னாரோ, அது கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாக அருண் - தீபக் இடையே சண்டை கொழுந்து விட்டு எரிந்தது மட்டுமல்லாமல், அதிலிருந்தே வீக்லி டாஸ்க... மேலும் பார்க்க

Bigg Boss 8: `எனக்கு கிடைச்ச மாதிரியான குழந்தைப் பருவம் யாருக்கும் இருக்கக்கூடாது’ - சிவக்குமார்

பிக் பாஸ் சீசன் 8, 60 நாட்களைக் கடந்து பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.ஈவில் , ஏஞ்சல் என டாஸ்க்குகளும் ஒரு புறம் சூடுபிடித்துக் கொண்டிருக்க எவிக்‌ஷனிலும் பரபரப்பு தொடங்கிவிட்டது. கடந்த வாரம் டிவிஸ்... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணிக்கு காத்திருக்கும் மூன்று முக்கியப் பிரச்னைகள்! - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மட்டும் தப்பித்து விடுவது போல கதை நகர்வது ஏன் என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு முறையும் எழுகிறது. ரோகிணி மிகவும் சுலபமாக சிக்கி விடுவது போல இருந்தால் கதையில் ச... மேலும் பார்க்க

BB Tamil: `சிங்கிள் மதரா எவ்வளவோ எதிர்கொண்டிருக்கிற அக்கா, 'பிக்பாஸ்'ல..!' - மஞ்சரியின் தங்கை யாழினி

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8, விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கியது நிகழ்ச்சி. சில வாரங்களுக்குபின் ... மேலும் பார்க்க