டி. ராஜேந்தர் குரலில் கூலி பாடல் புரமோ!
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படத்தில் இடம்பெற்ற பாடலின் புரமோவை வெளியிட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் அமீர் கானுடன் இணைந்து ரஜினி நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: 74 வயதிலும் சூப்பர் ஒன்! ரஜினிக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?
பான் இந்திய வணிகத்திற்காக படத்தில் பல மாநில நடிகர்களும் இணைந்து நடித்து வருவதால் கூலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ‘சிகிடு வைப்’ (chikitu vibe) என்கிற பாடலின் சில நொடி புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்த இப்பாடலை டி. ராஜேந்தர் பாடியுள்ளார்.