செய்திகள் :

திருவண்ணாமலை தாண்டவ தரிசனம் முதல் வேதாரண்யம் விளக்குப் பிரார்த்தனை வரை

post image
மலையே சிவலிங்கமெனத் திகழும் திருத்தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் இந்தத் தலத்தில், திருப்பாதம் பதிக்காத மகான்களே இல்லை எனலாம். அடிமுடி தேடிய பிரம்மனுக்கும் திருமாலுக்கும் பெரும் ஜோதியாக - லிங்கோத்பவராக பரமன் காட்சி தந்த தலம் திருவண்ணாமலை; அந்தத் திருநாள் திருக்கார்த்திகை!

அதுமட்டுமா?! கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும்; இருவரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தி சிவபெருமான், பார்வதிதேவிக்கு தன் உடலின் பாதியை வழங்கி, அர்த்தநாரீஸ்வரராகக் கோலம் பூண்டார் அல்லவா... அந்த நன்னா ளும் திருக்கார்த்திகைதான்; அப்படி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்ததும் திருவண்ணாமலையில்தான்!

அவ்வகையில், ‘அருந்தவம் இருந்து, சிவ பெருமானின் இடப் பாகம் பெற்றதற்கு நன்றி கூறவே திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழாவை உண்ணாமலை அம்மன் தொடங்கி வைத்தாள்’ என்று அருணாசலப் புராணம் கூறுகிறது.

மகத்துவம் வாய்ந்த திருவண்ணாமலையில் தீபத்திருநாளில் முக்கியத்துவம் பெறும் இரண்டு விஷயங்கள், கிரிவலமும் மகாதீப தரிசனமும். பௌர்ணமி - கிரிவலத்துக்கு உகந்த நாள் என்பார்கள். ஆனாலும், திருக்கார்த்திகை முதலான திரு நாட்களில் கிரிவலம் வருவது, மிகுந்த பலனைத் தரும் என்பது உறுதி!

தீபத் திருத்தலங்கள்

கிரிவலம் தரும் பலன்கள்

கிரிவலத்தின் மகிமையைப் பெரிதும் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். ஓர் அடி எடுத்து வைத்தாலே பலன் உண்டாம்! ஓரடிக்கு மனதால் நினைத்த பாவமும், ஈரடிக்கு சொல்லால் செய்த பாவமும், மூன்றடிக்கு உடலால் செய்த பாவங்களும் தொலையும். அதேபோல், உச்சிக் காலத்தில் கிரிவலம் வந்தால், நினைத்தது நிறைவேறும்; மாலையில் வந்தால், செல்வம் தழைக்கும்! ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால், தீராத நோயும் தீரும்; திங்கட்கிழமை கிரிவலம் வந்தால், பாவங்கள் மொத்தமும் தீரும் என்கின்றன ஞானநூல்கள்.

அதேபோல், தீபத் திருநாளில், இறைவனையும் இறைவியையும் மனதார தியானித்து, மகா தீபத்தைத் தரிசித்தபடி கிரிவலம் வந்தால், கோடி பலன்கள் கிடைக்கும்; இப்பிறவியிலான அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணிய பலனைப் பெறுவார்கள் என்கின்றன புராணங்கள். அடுத்தது மகாதீப தரிசனம். தீபத் திருநாளன்று அதிகாலையில், மலையடிவாரத்தில் ஏற்றப்படுவது- பரணி தீபம்; மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம்.

மகாதீப தரிசனம்

மகாதீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. மகாதீபத்துக்கான வெண்கலக் கொப்பரை, கி.பி.1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் ‘பர்வத ராஜ குலம்’ எனப்படும் மீனவ குலத்தவர். ஆலயத்தின் தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன், மகாதீபம் ஏற்றப்படும்!

முக்தி தாண்டவ தரிசனம்!

சிவபெருமான் ஓயாது திருநடனம் புரிந்துகொண்டிருக்கின்றார். ஒவ்வொரு உயிரிலும், உயிரற்ற பொருள்களிலும் அவர் கலந்து நின்று திருநடனம் புரிகின்றார். அந்த நடனமே உலகில் உயிர்களின் இயக்கத் துக்குக் காரணமாக இருக்கிறது.

சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முச்சுடர் மண்டலங்களின்நடுவிலும் உமையொருபாகனாக நின்று சிவபெருமான் ஆடும் நடனங்கள் தனிச்சிறப்புடன் போற்றப்படுகின்றன.

அவ்வகையில் ஈசன் சூரியமண்டலத்தில் நின்று ஆடுவது ஞான தாண்டவம் ஆகும். இது உயிர்களுக்கு ஞானத்தை நல்கி அறிவைப் பிரகாசிக்க வைக்கும். தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயக் கோட்டம், திருவண்ணாமலை, சிதம்பரம் கோபுரங்களின் கோட்டங்களில் இவரைத் தரிசிக்கலாம். 

சிவபெருமான் சந்திர மண்டலத்தின் நடுவில் நின்றாடுவது, அமுதத் தாண்டவம் ஆகும். இதனால், உயிர்கள் அழியாத நிலைப்பேற்றைப் பெறுகின்றன. இந்தக் கோலத்தினை ஆரணி  காமக்கூர் எனும் தலத்தில் தரிசிக்க இயலும்.

சிவபெருமான் உயிர்களுக்கு அழியாத முக்தி ஆனந்தத்தை அருளும் திருநடனத்தை அக்னி மண்டலத்தின் நடுவே நின்று ஆடுகிறார். அதுவே முக்தி நடனம் எனப்படும். அதை அவர், கார்த்திகைத் தீப நாளில் திருவண்ணாமலையில் ஆடுகிறார். இதை உணர்த்தும் ஐதீகக் காட்சி கார்த்திகைத் தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் நடத்தப் படுகின்றது. 

இதைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு வாழும் நாளில் சகல ஐஸ்வர்யங்களும், வாழ்க்கைக்குப் பிறகு முக்திப்பேறும் கிடைக்கும் என்பார்கள். திருவண்ணாமலை மட்டுமன்றி தீபத்தால் சிறப்புப்பெற்ற வேறுசில தலங்களும் உண்டு.

தீபத் திருத்தலங்கள்

தீவினைகள் தீர்க்கும் தீபத் திருத்தலங்கள்

காஞ்சிபுரம் தீபப்பிரகாசர் கோயிலில் மகாவிஷ்ணு, ஜோதி வடிவில் காட்சி தருகிறார். இந்தத் தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு ‘விளக்கொளி பெருமாள்’ என்று திருநாமம். திருக்கார்த்திகைத் திருநாளில் வைணவர்கள், விளக்கொளிப் பெருமாளுக்கு தீபங்கள் ஏற்றி, ‘பெருமாள் கார்த்திகை’யைக் கோலாகலமாகக் கொண்டாடு கிறார்கள்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், கார்த்திகை பௌர்ணமி அன்று சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருள்வார் ரங்கநாதர். அப்போது கார்த்திகை கோபுர வாயிலில் சொக்கப்பனை (பாஞ்சராத்ர தீபம்) ஏற்றுவர். பிறகு, ரங்கநாதர் சந்தன மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு, திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை அரையர்கள் பாடுவர். இதையடுத்து, மார்கழி விழாவின் பொருட்டு நம்மாழ்வாருக்கு விவரமாகக் கடிதம் எழுதுவர். இதனை, முகப்பட்டயம் என்பார்கள். இந்த வைபவம் முடிந்ததும் சந்நிதிக்குத் திரும்புகிறார் ரங்கநாதர். இந்த நன்னாளில் இங்கு வந்து பெருமாளைத் தரிசிக்க நமது பாவங்கள் தொலையும்.

சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனிக்கு, புற்றுத் தைலம் சார்த்தி கவசம் அணிவித்திருப்பார்கள். கார்த்திகை மாதம் பௌர்ணமி தொடங்கி மூன்று நாள்கள் மட்டுமே இந்தக் கவசத்தை நீக்குவார்களாம். இந்த நாட்களில் இறைவனைத் தரிசிக்க தேவர்கள் வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள விஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்திகைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜகந்நாத ஸ்வாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!

வேதாரண்யம் விளக்கழகு என்பார்கள். ராமர், பிரம்மன், விஸ்வாமித்திரர், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம்; சக்தி பீடங்களில் சுந்தரி பீடம் அமையப்பெற்றது; நடராஜரின் 16 சபைகளில் ஒன்று; சப்தவிடங்கத் தலங்களில், புவனவிடங்கத் தலம்; சரஸ்வதிதேவி வீணையின்றிக் காட்சி தரும் தலம்; துர்கை தவக் கோலத்தில் காட்சி தரும் திருத்தலம்... இப்படிப் பல சிறப்புகளோடு திகழ்கிறது வேதாரண்யம்.

தீபத்தலங்கள்

மட்டுமன்றி இங்குள்ள சிவாலய தீபத்தை, அறியாமல் தூண்டிய தாலேயே ஒரு எலி, மறுபிறப்பில் மூவுலகை ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியானதாம். திருக்கார்த்திகை தீப நன்னாளில், ஆயிரக் கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோயிலே ஜொலிக்குமாம்! 

பிறகு விநாயகர், வேதாரண்யேஸ்வரர், வேதநாயகி, தியாகராஜர், துர்கை ஆகியோரின் திருச்சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகளும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருக்கார்த்திகை தினத்தில் இங்கு வந்து தாமரைத் தண்டில் திரி அல்லது பஞ்சு கொண்டு விளக்கேற்றி, வேதாரண்யேஸ்வரரையும் வேத நாயகியையும் வழிபட்டால், சகல பாவங்களும் விலகும்; பெண்கள் தாலி பாக்கியம் பெற்று, சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்க வாழ்வார்கள்

சபரிமலை: `மாளிகபுறத்தில் மஞ்சள் தூவி, தேங்காய் உருட்ட வேண்டாம்' - கோர்ட் கருத்தை வரவேற்ற தந்திரி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பா நதி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, சவுதி… உண்டியலில் குவிந்த வெளிநாட்டு கரன்சிகள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆ... மேலும் பார்க்க

Deivanai Elephant: பாகன் இறந்து, 11 நாள்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு வெளியே வந்த தெய்வானை..!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நா... மேலும் பார்க்க

பழநி: `ரஷ்ய பக்தர் தந்த 6 அடி வேல்'- 12 கிலோ எடையில் தந்த காணிக்கையின் காரணம்

தமிழ்க் கடவுளான முருகன் கோயில்களில் முக்கியமான தளமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளில... மேலும் பார்க்க

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள், தோஷங... மேலும் பார்க்க

சபரிமலை: `18 படிகளில் ஏறி நின்று போலீசார் போஸ்' வைரலாகும் போட்டோ... பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

மண்டலகால மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை நவம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பா, சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் போல... மேலும் பார்க்க