'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்
பழநி: `ரஷ்ய பக்தர் தந்த 6 அடி வேல்'- 12 கிலோ எடையில் தந்த காணிக்கையின் காரணம்
தமிழ்க் கடவுளான முருகன் கோயில்களில் முக்கியமான தளமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும் பழநிக்கு அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம்.
தமிழகம் மட்டுமில்லது அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்களும் இந்த சீசனில் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன் முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடந்தபோது கூட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50 பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பக்தர்கள் 10 நாள்களுக்கு முன் தமிழகம் வருகை வந்தனர். இவர்கள் ஆறுபடை வீடு முருகன் கோயில்கள் உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று வருகின்றனர். அதன்படி பழநி வந்த ரஷ்ய பக்தர்கள் படிப்பாதை மூலம் மலைக்கோயில் வந்தனர். முருகன் சந்நிதியில் 12 கிலோ எடை கொண்ட 6 அடி பித்தளை வேலை காணிக்கையாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். பொதுவாக பக்தர்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேற முருகக் கடவுளுக்கு வேல் வழங்குவது வழக்கம். அரசியல் பிரமுகர்கள் பலரும் வேலை இப்படி காணிக்கையாக வழங்குவர்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் செய்ததோடு கோயில் கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் ஆச்சரியமாகக் கண்டு ரசித்துக்கொண்டே தரிசனம் செய்தனர். பின்னர் வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு இறங்கி புறப்பட்டுச் சென்றனர்.