செய்திகள் :

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த ஷிண்டே; அமைச்சரவையில் சிவசேனாவுக்கு தாராளம் காட்டும் பாஜக

post image

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் விவகாரத்தில் தனது பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்தார். இதனால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சம்மதித்துள்ளார். பா.ஜ.க தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக ஏக்நாத் ஷிண்டே நேற்று அறிவித்தார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததற்காக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு கூடுதல் அமைச்சர் பதவி கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

முக்கிய துறைகளான பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, நீர்வளத்துறை உட்பட 12 கேபினட் அமைச்சர் பதவிகள் கொடுப்பதாக ஏக்நாத் ஷிண்டேயிடம் பா.ஜ.க வாக்குறுதி கொடுத்திருக்கிறது. மஹாயுதி கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 அமைச்சர் பதவிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவையில் மொத்தம் 43 பேரை வைத்திருக்க முடியும். இதில் முதல்வர் பதவி உட்பட பாதி அமைச்சர் பதவிகளை தனக்கு வைத்துக்கொள்ள பா.ஜ.க முடிவு செய்திருக்கிறது.

இரண்டு துணை முதல்வர் பதவிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ள பா.ஜ.க, அதில் ஒன்றை அஜித் பவார் கட்சிக்கு கொடுக்க இருக்கிறது. மற்றொரு துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதோடு அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டே சேர வேண்டும் என்றும், துணை முதல்வர் பதவியை ஏற்கவேண்டும் என்றும் பா.ஜ.க கேட்டுக்கொண்டது. ஆனால் ஏற்கெனவே மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் போராட்டத்தால் மகாராஷ்டிரா கலகலத்து இருக்கிறது. எனவே அஜித் பவார் ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தில் இருந்து துணை முதல்வராக பதவியேற்பதால் மற்றொரு துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே கட்சியில் உள்ள தலித் சமுதாயத்தை சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத்திற்கு கொடுப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே பரிசீலித்து வருகிறார்.

இது குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அதோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முன் வந்ததற்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே அளித்த பேட்டியில், ''ஏக்நாத் ஷிண்டே மிகப்பெரிய முடிவு எடுத்திருக்கிறார். அதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அவரது முடிவை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் முதல்வர் பதவிக்காக சண்டையிட்டுக்கொள்ளவில்லை. மகாராஷ்டிராவில் உள்ள 14 கோடி மக்களுக்காக போராடுகிறோம்'' என்றார்.

Lebanon: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் செயல்படுத்தப்படுவது எப்படி?

ஓராண்டுக்கு மேலாக மோதிக் கொண்டிருந்த இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன்படி, லெபனானில் படிப்படியாக அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. அதே நேரம், `காஸாவிலும் போர்... மேலும் பார்க்க

Bangladesh: `இஸ்கான் இந்து அமைப்பை தடை செய்யுங்கள்...' - வலுக்கும் போராட்டம் - காரணம் என்ன?!

'இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை' என்று ஒரு பக்கமும், 'கிருஷ்ணர் அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்று இன்னொரு பக்கமும் வங்காளதேசம் மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது. வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹ... மேலும் பார்க்க

'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தமிழக பா.ஜ.க-வுக்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் வெடித்துக் கிளம்பியது. இந்தச்சூழலில்தான் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்... மேலும் பார்க்க

`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா இல்லையா?' - சர்ச்சையும் உண்மையும் | முழு அலசல்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் சர்ச்சைக்குரிய பதிலால், `காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா? தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா? செல்லாதா? மத... மேலும் பார்க்க

``தரக்குறைவான புதிய பாம்பன் பாலம்; உயிர்களை அலட்சியப்படுத்தும் ரயில்வே" - எம்.பி சு.வெங்கடேசன்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914-ல் தூக்குப்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ரூ.545 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களுடன் புதிய தூக்குப்... மேலும் பார்க்க

கழுகார்: `தள்ளிப்போகும் அண்ணாமலை வருகை டு இளைஞரணி நிர்வாகிகள்மீது புகாரும் கண்டுகொள்ளாத தலைமையும்’

காய்நகர்த்தி சாதித்த மா.செ-க்கள்!மாற்றப்பட்ட தொகுதிப் பார்வையாளர்கள்...சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தொகுதிப் பார்வையாளர்களில் 20-க்கும் மேற்பட்டோரை, சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறது தி.மு.க த... மேலும் பார்க்க