செய்திகள் :

Lebanon: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் செயல்படுத்தப்படுவது எப்படி?

post image
ஓராண்டுக்கு மேலாக மோதிக் கொண்டிருந்த இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன்படி, லெபனானில் படிப்படியாக அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. அதே நேரம், `காஸாவிலும் போர் நிறுத்தம் வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது. அதற்கு அடுத்த நாளே, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஹிஸ்புல்லா ஆயுதப்படை. அன்று தொடங்கி 13 மாதங்களாக இரு தரப்புக்குமிடையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவ்வப்போது இரு படைகளும் மாறி மாறித் தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஹிஸ்புல்லாவின் படைத் தளபதி ஃபுவாத் ஷுக்ர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. `எங்கள் தளபதியைக் கொன்ற இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுப்போம்' எனச் சூளுரைத்த ஹிஸ்புல்லா, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல்மீது ஏவித் தாக்குதல் நடத்தியது.

போர்

உலகின் பவர்ஃபுல் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் மூலம் பெரும்பாலான ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தியது இஸ்ரேல். அதனால், அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம், ஹிஸ்புல்லாவின் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல், அந்த அமைப்பை அடியோடு ஒழித்துக்கட்ட நினைத்து அடுத்தடுத்து காய்களை நகர்த்தியது.

குறிப்பாக, ஹிஸ்புல்லாவினர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து பலரையும் கொன்றது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமின்றி, லெபனானிலுள்ள பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா மீண்டும் பதிலடி தாக்குதல்களைத் தொடங்க, இஸ்ரேலும் லெபனான்மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கொடூரப் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல், லெபனானிலும் போரைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் போரிலும் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.

ஒருகட்டத்தில், தரை வழியாகவே தெற்கு லெபனான் பகுதியில் நுழைந்தது இஸ்ரேல் ராணுவம். இதனால், தெற்கில் வசித்துவந்த லெபனான் மக்கள், வடக்கு நோக்கிப் படையெடுத்தனர். லெபனானில் வெடித்த போர், மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இதனால், பல நாடுகளுக்கும் போர் பரவும் அபாயம் உருவானது.

போர் நிறுத்த ஒப்பந்தம்

இந்த நிலையில்தான், நவம்பர் 27 முதல் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவும், பிரான்ஸும் இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின்படி, லெபனான் - இஸ்ரேல் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லையாகக் கருதப்படும் ப்ளூ லைன் மற்றும் லிடானி நதிப் பகுதிகளிலிருந்து 60 நாள்களுக்குள்ளாக படைகளை இரு தரப்பும் திருப்பிப் பெற வேண்டும். மேலும் தெற்கு லெபனானில், அந்த நாட்டு ராணுவமும், ஐ.நா-வின் அமைதி காக்கும் படையும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல, அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று, போர் நிறுத்த நடைமுறைகளைக் கண்காணிக்கும். ஒப்பந்தம் மீறப்படும் பட்சத்தில், இந்தக் குழு நடவடிக்கைகளை எடுக்கும்.

பைடன் - நெதன்யாகு

லெபனான் பிரதமர் நஜீப் மிகாடி, ``தெற்கு லெபனானில் எங்களது ராணுவ வலிமையை அதிகப்படுத்த முடிவு செய்திருக்கிறோம். இனி லெபனானில் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புகிறோம்'' என்றிருக்கிறார். லெபனானில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், தெற்கு லெபனானைவிட்டு வெளியேறிய மக்கள் பலரும், மீண்டும் வீடுகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ, ``போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஹிஸ்புல்லாவோ, அவர்களது கூட்டாளிகளோ மீறினால், பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது'' எனத் தெரிவித்திருக்கிறார். எனவே, இந்த ஒப்பந்தத்தை எந்தத் தரப்பு மீறினாலும், மீண்டும் அங்கு போர் வெடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Bangladesh: `இஸ்கான் இந்து அமைப்பை தடை செய்யுங்கள்...' - வலுக்கும் போராட்டம் - காரணம் என்ன?!

'இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை' என்று ஒரு பக்கமும், 'கிருஷ்ணர் அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்று இன்னொரு பக்கமும் வங்காளதேசம் மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது. வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹ... மேலும் பார்க்க

'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தமிழக பா.ஜ.க-வுக்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் வெடித்துக் கிளம்பியது. இந்தச்சூழலில்தான் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த ஷிண்டே; அமைச்சரவையில் சிவசேனாவுக்கு தாராளம் காட்டும் பாஜக

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் விவகாரத்தில் தனது பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்... மேலும் பார்க்க

`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா இல்லையா?' - சர்ச்சையும் உண்மையும் | முழு அலசல்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் சர்ச்சைக்குரிய பதிலால், `காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா? தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா? செல்லாதா? மத... மேலும் பார்க்க

``தரக்குறைவான புதிய பாம்பன் பாலம்; உயிர்களை அலட்சியப்படுத்தும் ரயில்வே" - எம்.பி சு.வெங்கடேசன்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914-ல் தூக்குப்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ரூ.545 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களுடன் புதிய தூக்குப்... மேலும் பார்க்க

கழுகார்: `தள்ளிப்போகும் அண்ணாமலை வருகை டு இளைஞரணி நிர்வாகிகள்மீது புகாரும் கண்டுகொள்ளாத தலைமையும்’

காய்நகர்த்தி சாதித்த மா.செ-க்கள்!மாற்றப்பட்ட தொகுதிப் பார்வையாளர்கள்...சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தொகுதிப் பார்வையாளர்களில் 20-க்கும் மேற்பட்டோரை, சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறது தி.மு.க த... மேலும் பார்க்க