செய்திகள் :

கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இவர்..! முன்னாள் வீரரின் திடமான கருத்து!

கேன் வில்லியம்சன் அரைசதம்

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டாம் லாதம் அதிகபட்சமாக 47 ரன்களும், கிளன் பிளிப்ஸ் 41* ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடான் கார்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: பேராசை பிடித்தவர்கள் இந்திய ரசிகர்கள்..! கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கருத்து!

கிளன் பிளிப்ஸ் 41 ரன்களுடனும், டிம் சௌதி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைய... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.கான்பெராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: சதம் விளாசிய கம்ரான் குலாம்; ஜிம்பாப்வேவுக்கு 304 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கட... மேலும் பார்க்க

ஆஸி. பிரதமரை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் 1-0 என... மேலும் பார்க்க

2ஆவது டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு..! அறிமுகமாகும் வரலாற்று நாயகன்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இவர்..! முன்னாள் வீரரின் திடமான கருத்து!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. மோசமான தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுன்டர் மிட்செல் மார்ஷுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நூறு சதவிகிதம் விளையாடமுடியவில்லை என தக... மேலும் பார்க்க