செய்திகள் :

ரூ. 3,87,000 வழிப்பறி கொள்ளை; போலீஸில் பொய் புகார்... நாடகம்; நிறுவன ஊழியர் சிக்கியது எப்படி?

post image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் (வயது: 28). பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை கடைகளுக்கு நேரடியாக சப்ளை செய்யும் நிறுவனத்தில் பாஸ்கரன் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருவதோடு, தினந்தோறும் வசூல் செய்யும் பணத்தை அந்த நிறுவனத்தில் அடுத்த நாள், ஒப்படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 13 - ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பஞ்சபட்டி அருகே உள்ள பூலாம்பட்டி பிரிவு சாலை அருகே ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரன், தன்னிடம் வைத்திருந்த வசூல் பணம் ரூ.3,87,000 ரொக்க பணத்தை கத்திமுனையில் மிரட்டி பறித்து கொண்டு சென்றுவிட்டதாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, நிறுவனத்திடம் பணத்தை பறி கொடுத்ததுபோல தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவில், குளித்தலை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் நடத்தி வந்த விசாரணையில், அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்கள், சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும், எவ்விதமான துப்பும் கிடைக்காததால் கடந்த 40 நாள்களுக்கு மேலாக போலீஸார், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிகரெட், பீடி கம்பெனி நிறுவன ஓட்டுநரான பாஸ்கரனை, தனிப்படை போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

கைதானவர்கள்

அவர்களின் கிடிக்கிப்பிடி விசாரணையில் ஓட்டுநர் பாஸ்கரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி கொள்ளை நாடகத்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பாஸ்கரனை கைது செய்து, வழிப்பறி கொள்ளை நாடகத்திற்கு அவருக்கு உடந்தையாக இருந்ததாக கரூர் பாகநத்தத்தைச் சேர்ந்த தன்ராஜ் (22), தமிழரசன் (23), கரூர் தான்தோன்றிமலை வ.உ.சி தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் (24) உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழிப்பறி கொள்ளை சம்பவத்தின் போது செல்போன் பயன்படுத்தப்படாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. தற்போது சந்தேகத்தின் பெயரில் பாஸ்கரனை கண்காணித்து வலைவிரித்து விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்த போலீஸார், 40 நாட்கள் கடந்த சஸ்பென்ஸூக்கான முடிச்சை அவிழ்த்திருக்கிறார்கள். இதனிடையே, தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டியதோடு, வெகுமதி பரிசும் வழங்கியுள்ளார். தனது கம்பெனி பணத்தை யாரோ வழிப்பறி கொள்ளை செய்ததாக கூறி நாடகம் ஆடிய இளைஞர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லிவ் இன் பார்ட்னர் கொலை; 40 துண்டுகளாக வெட்டிய காதலன் - அதிர்ந்த போலீஸ்

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த காதலன் கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி காட்டில் வீசி எறிந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அதுபோன்ற... மேலும் பார்க்க

தருமபுரி: `சாலை வசதி இல்லை' - கிடைக்காமல் போன துரித சிகிச்சை; பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் அமைந்துள்ளது. இம்மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அ... மேலும் பார்க்க

`அசைவ உணவு சாப்பிட விடாமல் காதலன் துன்புறுத்தல்?' - ஏர் இந்தியா பெண் பைலட் மும்பையில் தற்கொலை!

மும்பையில் ஏர் இந்தியாவில் பைலட்டாக இருந்தவர் சிருஷ்டி துலி (25). மும்பை மரோல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்த துலி டெல்லியை சேர்ந்த ஆதித்யா ... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதி - சோதனையில் 47 பேர் கைது; ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண், மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் சம... மேலும் பார்க்க

`பேச மறுத்தார்… போலீஸில் புகார் செய்வதாக மிரட்டினார்; கத்தியால் குத்தினேன்!' - இளைஞர் `பகீர்!'

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேல... மேலும் பார்க்க

சென்னை: நாய்கள் கடித்துக் குதறியதால் முதியவர் மரணமா? - அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை!

சென்னை, அரும்பாக்கம் வாசுகி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (80). இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்து வந்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். சு... மேலும் பார்க்க