ஜம்மு- காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜம்மு- காஷ்மீரில் இன்று(நவ.28) மாலை 4.19 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், இதனால், யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் இருந்து 36.49 டிகிரி வடக்கு மற்றும் 71.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேக்கு 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.