செய்திகள் :

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

post image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று (நவம்பர் 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இதையும் படிக்க: விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேசவ் மகாராஜ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

42 ரன்களில் ஆட்டமிழப்பு

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 42 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 5 வீரர்கள் (தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஸ்வா ஃபெர்னாண்டோ, அஷிதா ஃபெர்னாண்டோ) டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஆட்டமிழந்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதையும் படிக்க: கடைசி ஒருநாள்: சதம் விளாசிய கம்ரான் குலாம்; ஜிம்பாப்வேவுக்கு 304 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ யான்சென் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணி 150-க்கும் அதிகமான ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்

பயிற்சியாளராக பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள்ளாக கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.டி20 உலகக் கோப்பைத் த... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

அடிலெய்டு டெஸ்ட்டில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்: முன்னாள் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.இந்த... மேலும் பார்க்க

ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேனுக்கு முன்னாள் ஆஸி. கேப்டன் அறிவுரை!

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேனுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ஜெர்சியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அறிமுகப்படுத்தி வைத்தார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செய... மேலும் பார்க்க