செய்திகள் :

மௌனத்தின் மொழி - நான் எப்படி கதை எழுதினேன்..? | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

நான் எப்படி இதை செய்தேன் என்று நினைத்துப் பார்த்த போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

கதை முழுவதையும் மீண்டும் வாசித்த போது பிரமிப்பு வியப்பாக அடுத்த கட்டத்துக்கு நகர தொடங்கியது.

என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

பேனாவை பிடித்தது மட்டும் தான் நினைவில் உள்ளது. ஆனால் அதை எழுதிக் கொண்டிருந்தது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நான் எப்படி இதை செய்தேன் என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் என்னுள்ளே எழுந்து கொண்டிருந்தது.

இருந்த இடத்தை விட்டு எழ முடியாமல் வாசிப்பில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.

மீண்டும், மீண்டும் வாசிக்கும் போது, ஒவ்வொரு தடவையும் புதுப் பக்கங்களும் திருப்பங்களும் கற்பனையாய் தோன்றிக்கொண்டே இருந்தன.

நான் இதை எப்படி எழுதினேன்? என்னால் எப்படி எழுத முடிந்தது? என்ற சிந்தனையும் கேள்வியும் எப்போதும் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது.

சித்தரிப்புப் படம்

`காரணமில்லாமல் எதுவும் தோன்றுவதுமில்லை’ என நான் நம்புகிறேன்.

கதைகளில் உலவும் மாந்தர்களுக்கு பெயர், ஊர், அடையாளம் தேவையா?

கோடிகோடியாய் இருப்பவர்களில் உங்களோடு பயணிக்கும் ஒரு சிறிய அணு நான்.

என்ன எண்ணத்தில் கதை எழுத அமர்ந்தேன்? என்ற சிந்தனை தோன்றியது.

முதலில் கதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் அமரவில்லை. தினமும் அன்றாட வேலையை என்ன நடந்தது என்பதை டைரியில் எழுத அமர்ந்தேன்.

அது கதையாக மாறி போனது.

நான் விரும்பும் மனநிலையில் ஏதாவது எழுதிக் கொள்வது, அதை உணர்ந்த பிறகு அதை புதிதாக மாற்ற முயற்சிப்பது, எனக்கு தனிமையில் சந்தோஷத்தையும், நிறைவையும் கொடுக்கும் ஒரு செயலாக மாறிவிட்டது.

செய்ய போனது ஒன்று செய்தது இன்னொன்று, நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை... நினைவின் வழியில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் இப்போது தோன்றியது.

ஆஹா இதையும் கதையில் சேர்த்தால் என்ன? யோசனையும் கூடவே வந்தது.

 இப்படி தான் ஒவ்வொரு யோசனையிலும் ஒரு திருத்தமும் திருப்புமுனையும் மாறிக்கொண்டிருந்தது. 
ஆனால் மாறாதது ஒன்று தான்.

அது கதையின் கரு .
என்ன பெரிய கதை கரு

நானும் அவளும் காதலித்தோம்.

கடைசியில் திருமணத்தில் முடிந்தது. 

எனக்கு இன்னொருத்தியுடன் 

அவளுக்கு இன்னொருத்தனுடன்.


இது இல்லை 


நானும் அவளும் காதலித்தோம்.

இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் 

அவளுடைய அப்பா, என்னுடைய மாமனார் வில்லனாக மாறினார். 

ஆணவ படுகொலை தற்கொலையாக செய்தித்தாளில் வந்தது. 


இதுவும் இல்லை 


கீழ் ஜாதி , மேல் ஜாதி, வேலை நிறுத்தம், வேலை யுக்தி, பழி வாங்குதல் , கொலை, கொள்ளை , பாலியல் இதில் எதுவுமே இல்லை. ஏதோ ஒரு வெற்றிடம் இருப்பதாக தோன்றிக்கொண்டே இருக்கிறது. 


எல்லாமே சொல்லப்பட்டதாகவும் இல்லை யாரோ வாழ்க்கையில் ஏதோ ஒன்று நிகழ்ந்ததாகவும் இருக்கிறது. 

இதில் என்ன புதிய கதை கரு உருவாகி விட போகிறது.

சித்தரிப்புப் படம்

ஒவ்வொரு கதையின் கருவும் என் மனதில் நடக்கும் விளையாட்டின் வழியாக உருவாகிறது.
 அப்படிப்பட்ட கதை ஒருவேளை எழுத்தின் வலிமையையும், மனதின் ஓரமாக கொண்டுள்ள வெறுமையையும் வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது.  

 கதை எழுதும் போது மனதில் இருளே அப்பிக்கிடந்தது. 
அவ்வப்போது பளிச் பளிச் என்று மின்னல் வெட்டுவது போல் புதிய புதிய யோசனைகள் உருவாகிக்கொண்டிருந்தது. 

ஆனாலும் அந்த ஒளியால் இருளை முழுமையாக  துரத்த முடியவில்லை. 

இருட்டறையில் 
இருப்பது உலகமோ? 

இருளின் வாசலில் அனாதையாக போய் நிற்பது போல பிரம்மை . 

மனிதனை கொண்டு இருளும் ஒளியும் கண்ணை கட்டி கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருக்கிறது. 

மனிதனால் இந்த விளையாட்டில் பங்கேற்க முடியுமா? 

முடியும் என்பவர்களால் மட்டுமே மனதில் நடக்கும் நிகழ்வை இல்லை விளையாட்டை ஒரு பார்வையாளனை போல பார்க்கிறார்கள். 

சில நேரங்களில் பயமாக இருக்கிறது நானில்லாத என்னை - நான் பார்த்துக்கொண்டிருப்பது. 

இன்னும் ஆழமாக உற்று பார்த்து உற்று பார்த்து  கடைசியில் அந்த விளையாட்டை உருவாக்கியது தான் என்று நினைக்கும் போது ஆச்சரியமாகவோ பிரமிப்பாகவோ அக்கட்டத்தை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறேன் . 

சில நினைவுகளை கிளறிவிட்டும், வெற்றிடங்களை தனதாகவும் இருளின் வாசலில் தவிக்க விட்டு செல்லும் மனம் .

சித்தரிப்புப் படம்

மலையிலிருந்து சறுக்கி விழுந்து கொண்டிருக்கும் போது,  நிர்க்கதியான நிலையில் கண்ணுக்கு தென்பட்ட வஸ்துவை பிடித்து மேலே ஏறுவது போன்ற அடிபட்டு விழுந்து கொண்டிருக்கும் மனதை சொற்களை பிடித்து மேலே ஏற்றுவது தானே எழுத்து. 
அந்த வெற்றிடத்தை நிரப்புவது தானே எழுத்தின் உச்சம். 

ஸ்வரங்கள் ஏழு தான்.  ஆனால் பல லட்சம் மேலாக பாடல்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதே போல கதைகளும் ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. 

ஒரு எழுத்தாளன் விட்டுச் சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தை எப்படியாவது நிரப்புவதற்கு மிகவும் பாடுபடுகிறது இயற்கை. 

இது இயற்கை நியதி. 

இயற்கையாக இக்கதையில் ஒரு விஷயம் என்னை கவர்ந்து கொண்டிருந்தது. 

ரங்கநாதன் தெரு திருவிழா காலங்களில் கூட்ட  நெரிசலில் வியர்வை வழிந்து லேசாக பனிக்குடம் நாற்றம் வீசும் மனிதர்களின் நடுவில் சிக்கி சின்ன பின்னமாலும் அவர்களிடமிருந்து பிரிந்து விலகி வெளியே வந்து அவர்களை உற்று பார்த்துக் கொண்டிருக்கும் நிலை. அப்படி பார்ப்பதன் மூலம் எதையுமே உரித்தேரிய முடியாத நிலை. 

நான் நடுக்கடலில் உள்ள ஒரு  தீவில்  தன்னந்தனியாக நிற்பது போல பிரமை தட்டியது.  

நடமாடும் மனிதர்களும், கடைகளும்., நடைபாதைகளும் தராசு போன்று மேலும் கீழும் ஆடுவது போல தோன்றியது. 
ஒரு வாசகனை வசியப்படுத்த இந்த மாதிரி   நிலைமை  மட்டும் போதாது.

இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாமே குமரிக்கண்டம் போன்று சுவடு தெரியாமல் போய்விடும். 


அப்படி ஒன்றை எழுதும் போது பல எதிர்ப்புகள் எப்படி நீ இதை எழுதலாம்? என்ற கேள்விக்கு  “வேண்டுமென்று எழுதவில்லை பேனாவை பிடித்தது மட்டும் தான் நினைவில் இருக்கிறது. 

எழுதி முடித்த பிறகு தான் பிரமிப்பாக இருந்தது நானா இது?”  என்ற பதில் யாருக்குமே திருப்தியளிக்கவில்லை. 

சில நேரங்களில் யாரும் எதுவுமே கேட்காமலே இருப்பது செளகரியமாகவே இருந்துவிட போவதுமில்லை.
ஆயிரம் கேள்விகளுக்கு ஆயிரம் கற்பனை கதைகளை சொல்ல வேண்டிய அவசியாமாக இருக்காது அல்லவா? 

சில கற்பனை கதைகள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் அல்லவா? 

நேரடியாக கேட்டுவிட்டதால்  பின்விளைவுகளை பற்றி சிந்திக்கவில்லை . ஆனால் ஒரு காரியம் நடந்து விட்ட பின் , அதை பற்றி இந்த மாதிரி  சிந்திப்பதெல்லாம் அடிப்படையில் தவறு. 

அடிப்படையில் தவறு என்றாலும் மனம் அந்த சுகத்தை நாடி செல்கிறது.

சுகத்தின் வெளிப்பாடு முகத்தில் புன்னகை.

புன்னகையின் மறு சொரூபம் வலி. 
வலியை என்ற ஒன்றை உணர்ந்த பிறகு தானே 

வலி விஸ்பரூம் எடுக்கிறது. 

உணர்ந்த வலியை உணர்த்துவதுதானே எழுத்து? எழுத்து மாதிரி ஒரு அழகான விஷயம் உண்டோ? 
எழுத்து என்பது ஆயுதம் 

கத்தியின்றி ரத்தமின்றி மனித  மனத்துக்குள் உள்ளே நுழையும் ஆயுதம் 

ஒரு எழுத்தாளன் என்ன உணர்ந்தனோ , என்ன உணர்த்தபட்டதோ அதுதானே விஸ்வரூபம் எடுக்கிறது. 

இந்த விஸ்வரூபத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. 

இப்போதுதான் வீட்டுக்கு வீடு ஒரு இஞ்சினியர் இருப்பது போல பதிப்பகம் இருக்கிறதே! அதற்கு அனுப்பினால் என்ன? என்ற எண்ணம் உருவானது.

 எத்தனை இன்ஜினியர் இருந்தால் என்ன சாதிப்பது ஒரு சிலர்தானே அது போன்றுதானே பதிப்பகமும்? என்று மறு சிந்தனை புற்றில் உள்ள பாம்பு எட்டிப்பார்ப்பது போல் தலைதூக்கி எட்டி பார்த்தது. 

மகுடி ஊதி  பாம்பை கட்டுப்படுத்துவது  போல மனதை  உற்று பார்ப்பதன் மூலம் கட்டுப்படுத்திக்கொண்டு  மீண்டும் வாசிப்பினுள் தலை நுழைத்தேன். 
நான் எப்படி இதை செய்தேன்? 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

குட்டி குரங்கு - சிறார் சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`பல்’லேக்கா - தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 2 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மாறனின் மகிழினி! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க