செய்திகள் :

வணிக சிலிண்டர் விலை உயர்வு!

post image

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாயு சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்து ரூ. 1,980.50-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

இதையும் படிக்க: மகாராஷ்டிர புதிய அரசு டிச. 5-இல் பதவியேற்பு

இந்த நிலையில், தொடர்ந்து 5-ஆவது மாதமாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 16 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,980.50-ஆகவும், மும்பையில் ரூ.1,771.00-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,927.00-ஆகவும், புதுதில்லியில் ரூ.1818 ஆகவும் விற்பனையாகிறது.

அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆண்... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலின் தற்போதைய நிலை என்ன?

ஃபென்ஜால் புயல் தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 மணி நேரமாக நகராமல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்துக்கு கிழக்கே 40 கிமீ நிலை கொண்டுள்ளது.இப்புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த ... மேலும் பார்க்க

அவிநாசி: நடைபயிற்சி சென்ற கார் விற்பனையாளர் வெட்டிக் கொலை

அவிநாசி: அவிநாசியில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த கார் விற்பனையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலாயுதம்பாளையம் ஊராட்... மேலும் பார்க்க

வீடூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக வீடூர் அணை நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் 30 மணி நேரமாக தொடர் மழை!

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து பெய்து வரும் மழை வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது. ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வ... மேலும் பார்க்க

புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!

20 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் அதிகபட்சமாக 460 மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந... மேலும் பார்க்க