செய்திகள் :

Bigg Boss Tamil 8: வெளியேறிய ஆண் போட்டியாளர்... இந்த வார எவிக்‌ஷனில் நடந்தது என்ன?

post image

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், சுனிதா, சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கியது நிகழ்ச்சி.

அடுத்த சில தினங்களில் ராயன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட் முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றனர்.

இவர்களில் அடுத்தடுத்த எவிக்‌ஷன்கள் மூலம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட சிலர் வெளியேறினர்.

தற்போது ரஞ்சித், ராயன், ராணவ், பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, தீபக், சௌந்தர்யா முதலான சிலர் நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர்.

நிகழ்ச்சி தொடங்கி ஐம்பது நாள்களைக் கடந்து விட்டது. இந்நிலையில் இதுவரை எந்தவொரு வாரமும் டபுள் எவிக்‌ஷன் நிகழவில்லை. தற்சமயம் போட்டியாளர்கள் அதிகம் பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கலாமென எதிர்பார்க்கப் பட்டது.

நேற்று விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் காலை தொடங்கி நள்ளிரவு வரை நீண்டது.

சிவக்குமார்

கடந்த வாரம் நடந்த சண்டை சச்சரவுகளை முதலில் விசாரித்துத் தீர்ப்புச் சொன்னார் விஜய் சேதுபதி. மாலை எவிக்‌ஷனுக்கான நேரம் வந்தது.

இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் ஆர்.ஜே ஆனந்தி, ஜாக்குலின், ராயன், மஞ்சரி, அன்ஷிதா, சிவக்குமார், ரஞ்சித், சத்யா உள்ளிட்டோர் இருந்த நிலையில் ரசிகர்களிடமிருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் சிவக்குமார் எவிக்‌ஷனாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிருப்பதாகத் தெரிகிறது.

சிவக்குமாரைப் பொறுத்தவரை பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமென்கிற ஆரவத்தில் இருந்தவர். ஆனால் முதலில் இவரின் மனைவி சுஜா வருணிக்குதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து இந்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்றவர், இதுநாள் வரை தாக்குப் பிடித்ததே பெரிய விசயம்தான் என்கின்றனர் பிக்பாஸ் விமர்சகர்கள்.

சிவக்குமார் எவிக்‌ஷன் ஆன எபிசோடு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.

BB Tamil 8 Day 54: தீரா காதல்; தொடர் அழுகை - ரணகளமாகும் கிச்சன் ஏரியா

பிக் பாஸ் வீட்டின் சர்ச்சைகளுக்கு உணவுதான் பெரும்பாலும் அடிப்படையான கச்சாப்பொருளாக இருக்கும். சாப்பாடுதான் பெரும்பாலான சண்டைகளை உற்பத்தி செய்யும். அந்த வகையில் இன்றைய எபிசோடு ரணகளமாக இருந்தது.இன்றைய ந... மேலும் பார்க்க

Vj Dhanusek: 'இப்ப தாங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்' - 'நீ நான் காதல்' தனுஷிக் ஷேரிங்ஸ்

இலங்கையிலிருந்து மீடியா கனவை நிறைவேற்றச் சென்னைக்கு வந்தவர்விஜே தனுஷிக். தொகுப்பாளராக வர வேண்டும் என ஆசைப்பட்டவர்தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `நீ நான் காதல்' தொடரில் அஞ்... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 53: `பவித்ராவைப் பார்த்து பொறாமைப்பட்ட தர்ஷிகா' - ரியல்ல அதுக்கு நேர் எதிராக நடக்குது

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கியது. ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிற தொடரில் தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராயன், மஞ்சரி உள்... மேலும் பார்க்க

BBTAMIL 8: DAY 53 : தீபக்கிற்கு எழும் எதிர்ப்பும் ஆதரவும்; ‘ரணகள'மான பொம்மை டாஸ்க்!

சுதந்திரம் என்பதற்கும் சுயஒழுக்கம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அது எந்த தனிநபராக இருந்தாலும் ஓர் அமைப்பிற்குள் நுழையும் போது அங்குள்ள ‘நியாயமான’ விதிகளுக்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும். ‘தனி... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 52: `என் பொண்ணை ரிஜெக்ட் செய்தவன்' - வி.ஜே.விஷால் குறித்து நடிகையின் அம்மா

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி உட்பட பதினெட்டுப் போட்டியாளர்கள் முதலி... மேலும் பார்க்க

BB Tamil 8: `நீ யாரு என்ன சொல்றதுக்கு'- கெட்ட வார்த்தை பேசிய ராணா; எகிறிய சவுந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 53 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8, 50 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த வாரம் பொம்மை டாஸ்க்... மேலும் பார்க்க