ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
IND Vs AUS : ஆஸ்திரேலிய பிரதமரின் கிண்டல்; சிரித்துக்கொண்டே பதில் சொன்ன விராட் கோலி | Viral video
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கான பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், WTC (world test championship) பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவும் இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் இருந்தாலும், பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவில் வெற்றிபெறும் அணி மற்றொரு அணியை WTC யிலிருந்து வெளியேற்றும். எனவே, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயானப் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்புடன் நடந்து வருகிறது.
இந்த நிலையில், டிசம்பர் 6-ம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 2 நாள் பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்றது. இந்தப் பயிற்சிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்தார். அப்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சக வீரர்களை அறிமுகப்படுத்தினார். எல்லோருடனும் கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விராட் கோலியுடன் சில நிமிடங்கள் பேசினார். அந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் - விராட் கோலிக்கும் நடந்த உரையாடலில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ``பெர்த் மைதானத்தில் உங்களுக்கு நல்ல நேரம். ஆனாலும் எங்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை" என சிரித்துக்கொண்டே கூறினார். அதற்கு பதிலளித்த விராட் கோலி, ``அப்படியானால் நீங்கள் அதில் சில காரசாரமான விஷயங்களை சேர்க்கவேண்டும்” என பதிலளித்தார். உடனே, அந்தோணி அல்பானீஸ் ``இந்தியாவுக்கு அது நன்றாக தெரியும்" எனப் பேசிக்கொண்டே நகர்ந்தார்.