செய்திகள் :

நானும் தில்லி கேபிடல்ஸும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஒன்றிணைந்து வெல்வோம்: கே.எல்.ராகுல்

post image

ஐபிஎல் கோப்பையை தானும், தில்லி கேபிடல்ஸும் ஒன்றிணைந்து வெல்வோம் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அண்மையில் நிறைவடைந்தது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கே.எல்.ராகுல், தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்த நான்கு அணிகளுடன் இணைந்து விளையாடியபோதிலும், கே.எல்.ராகுல் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த நிலையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவர் தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இதையும் படிக்க:பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் கே.எல்.ராகுல் மிகச் சிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரில் நடுவரிசை ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், பின் நாள்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு இடைவெளிகளில் கே.எல்.ராகுல் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்தார். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி அசத்தினார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார். அந்த தொடரில் அவர் 670 ரன்கள் குவித்தார்.

கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் முதன் முதலாக அவரது கேப்டன்சி பயணம் தொடங்கியது. அவர் அந்த ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன் பின், லக்னௌ அணியின் கேப்டனாக அந்த அணியை அறிமுக சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுவரை அழைத்துச் சென்றார்.

இதையும் படிக்க: விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்த ஆண்டு மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் கே.எல்.ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது, அந்த அணியின் தைரியமான மற்றும் தீர்க்கமான முடிவாக பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுலின் ரன்கள் குவிக்கும் திறன் மற்றும் அவரது தலைமைப் பண்பு என இரண்டும் தில்லி கேபிடல்ஸுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரில் முதல் கோப்பைக்கானத் தேடலில் இருக்கும் தில்லி கேபிடல்ஸுக்கு கே.எல்.ராகுலின் வரவு மிகவும் பலம் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் தில்லி கேபிடல்ஸ் இருவரும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இருவரும் ஒன்றிணைந்து ஐபிஎல் கோப்பைக்கானத் தேடலில் இந்த சீசனில் பயணிக்க உள்ளனர்.

இது தொடர்பாக கே.எல்.ராகுல் கூறியிருப்பதை தில்லி அணி நிர்வாகம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது: நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. தில்லி கேபிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (நவம்பர்... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைய... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.கான்பெராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: சதம் விளாசிய கம்ரான் குலாம்; ஜிம்பாப்வேவுக்கு 304 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கட... மேலும் பார்க்க

கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண... மேலும் பார்க்க

ஆஸி. பிரதமரை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் 1-0 என... மேலும் பார்க்க