Ajmer Sharif: `அஜ்மீர் தர்காவில் சிவன் கோயில்?' - இந்து சேனாவின் மனுவும் நீதிமன்...
கிளியன் எம்பாப்பே மீண்டு வருவார்..! ரியல் மாட்ரிட் அணி மேலாளர் நம்பிக்கை!
பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பே இதுவரை 339 கோல்களை அடித்துள்ளார். 160 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.
கடந்த 2022 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார்.
கடந்த சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக 44 கோல்கள் அடித்த எம்பாப்பே தற்போது 18 போட்டிகளில் 9 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார்.
லா லீகா தொடரிலும் 12 போட்டிகளில் 7 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார்.
சமீபத்திய மோசமான ஆட்டத்தினால் தனது தேசிய அணியான பிரான்ஸில் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அவரில்லாமல் அந்த அணி விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணியின் மேலாளர் கார்லோஸ் அன்செலாட்டி கூறியதாவது:
இதுமாதிரி எனக்குமே பலமுறை நடந்திருக்கிறது. நீங்கள் ஸ்டிரைக்கராக இருக்கும்போது கோல் அடித்தாக வேண்டும். அபோதுதான் தன்னம்பிக்கை பிறக்கும்.
இந்தக் கணத்தில் எம்பாப்பே-க்கு தரவேண்டிய மருந்து மிகவும் கடினமானதுதான். உண்மையிலேயே கடினம் அவருக்கு. இந்த நேரத்தில் நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து அன்பை தரவேண்டும். விரைவில் சரியாகி விடுவார்.
இது தன்னம்பிக்கை இல்லாததால் இப்படி ஆகலாம். சில நேரங்களில் நாம் நினைத்தது நடக்காவிட்டால் வாழ்க்கையில் குழப்பிக்கொள்ளக் கூடாது. செய்யவேண்டிய விஷயங்களை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பெனால்டியை தவறவிட்டதுக்கு அவரை நாம் குற்றம் சுமத்தக்கூடாது. வீரர்கள் பெனால்டியை தவறுவது வழக்கம். இது பலமுறை நடந்திருக்கிறது.
எம்பாப்பேக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர் மிகச்சிறந்த நம்பமுடியாத வீரர். விரைவில் மீண்டு வருவார் என்றார்.
சாம்பியன் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 24ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. நடப்பு சாம்பியன் தொடர்ச்சியாக 3 குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் தோல்வியுற்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீதமுள்ள 3 போட்டிகளில் வென்று ரவுன்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெறுவது எட்டாக்கனியாக இருக்கிறது. லா லீகா தொடரில் பார்சிலோனாவுக்கு அடுத்து 2ஆவது இடத்தில் இருக்கிறது.