72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!
`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவாரஸ்யங்கள்..!
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோருக்கு அங்கு செயல்படும் தபால் நிலையம் பற்றி தெரிந்திருக்கும். சபரிமலையில் 1963-ம் ஆண்டு தபால் நிலையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது. மாளிகப்புறம் சன்னிதானத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் செயல்படும் இந்த போஸ்ட் ஆபீஸ்க்கு, பதினெட்டாம் படி மற்றும் ஐயப்ப சுவாமியின் விக்ரஹம் பதித்த சீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, 1974-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி தபால் நிலையம் அதிகாரப்பூர்வமாக செயல்படத்தொடங்கியது.
`சுவாமி ஐயப்பன், சபரிமலை சன்னிதானம் போஸ்ட் - 689713' என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பினால் இந்த போஸ்ட் ஆபீஸ்க்கு வந்து சேரும். இந்த போஸ்ட் ஆபீஸ் மண்டலகால மகரவிளக்கு பூஜை காலத்திலும், சித்திரை விஷூ சமயத்திலும் செயல்படும். மற்ற நாள்களில் ஐயப்பன் விக்ரஹம் பதிக்கப்பட்ட சீல் பத்தனம்திட்டா போஸ்டல் சூப்பிரண்ட் அலுவலக லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
பக்தர்கள் அனுப்பும் கடிதங்களும், காணிக்கை மணியாடர்களும் இந்த தபால் நிலையத்துக்கு வந்து சேரும். மணியார்டர் மற்றும் கடிதங்களை தபால் நிலைய அதிகாரிகள் சபரிமலை ஐயப்ப சுவாமி திருநடையில் வைத்த பின்னரே கோயில் எக்ஸிகியூட்டிவ் ஆபீஸரிடம் ஒப்படைக்கின்றனர்.
பக்தர்கள் புதுமனை புகுவிழா, திருமணம் போன்ற விசேசங்களுக்கு முதல் அழைப்பிதழை ஐயப்ப சுவாமிக்கு அனுப்புகின்றனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் இருந்து போஸ்ட் கார்டு, கடிதங்கள் வாங்கி தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். சபரிமலை ஐயப்ப சுவாமி சீலுடன் கூடிய கடிதங்கள் தங்கள் வீட்டுக்கு வருவதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். ஐயப்ப சுவாமி மற்றும் பதினெட்டாம் படியுடன் கூடிய சீல் பதித்த அந்த தபால் கார்டுகளை தங்கள் வீடுகளில் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.
இந்த போஸ்ட் ஆபீஸில் தபால் சேவைகள் மட்டுமல்லாது மொபைல் ரீசார்ஜ், இன்ஸ்டண்ட் மணியார்டர், போன்ற வசதிகளும் இங்கு உண்டு. அரவணை பிரசாதம் ஆஃப் லைன், ஆன்லைன் வழியாகவும் புக் செய்துகொள்ளலாம். ஐயப்ப சுவாமியின் உருவம் பொறித்த ஸ்டாம்புகளும் இங்கு வாங்கிக்கொள்ளலாம். ஒரு போஸ்ட் ஆப்பீஸர், ஒரு போஸ்ட்மேன். இரண்டு ஊழியர்களும் சபரிமலை தபால் நிலையத்தில் பணிபுரிகின்றனர். இந்திய ஜனாதிபதிக்கு சொந்தமாக பின்கோடு உண்டு. அதுபோன்று சொந்தமாக பின்கோடும், சீலும் உள்ளது சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மட்டும்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...