செய்திகள் :

சூரியனார் கோயில் மடம்: `திருமண சர்ச்சை; ஆதீனத்தை வெளியேற்றி, பூட்டு போட்ட மக்கள்’ - நடந்தது என்ன?

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சூரியனார் கோயில் மடம். தமிழகத்தில் உள்ள 18 சைவ மடங்களில் பழைமையான இந்த மடத்திற்கு என சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சூரியனார் கோயில் மடத்தின் 28 வது ஆதீனமாக மகாலிங்க சுவாமிகள் இருந்து வருகிறார். ஆதீனத்தில் அடுத்த நிலையிலிருந்து மடத்தின் நிர்வாகத்தை கவனித்து வந்தவர் ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமிகள்.

அறநிலையத்துறையினருடன் மகாலிங்க சுவாமி

இந்த நிலையில் கர்நாடகவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்பவரை மகாலிங்க சுமாமி கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கான பதிவு சான்றிதழும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. `நான் திருமணம் செய்து கொண்டது உண்மை’ என ஆதீனமும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமிகள், `துறவறம் மேற்கொண்டவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல. இது ஆதீனங்களின் சம்பிரதாயத்திற்கு எதிரானது. மடத்தின் மாண்பை கெடுத்து விட்டதால் ஆதீனமாக இருக்க கூடிய தகுதியை இழந்து விட்டதாக’ கருத்து தெரிவிக்க பரபரப்பானது இந்த விவகாரம்.

இதையடுத்து ஆதீனமும், ``ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமி, மடத்தில் தங்கி சமய பணிகளை செய்யவில்லை, அவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்” என குற்றச்சாட்டினார். இந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ மடங்கள் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சூரியனார் கோயிலை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆதீனத்தின் மீது அதிருப்தியடைந்தனர்.

நிர்வாக பொறுப்பை ஒப்படைக்கும் ஆதீனம்

ஆதீனம் திருமணம் செய்து கொண்டதால் ஆதீனமாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார். மடத்தி சொத்துக்களை அபகரிக்கவே ஆதீனம் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஆதீனமாக தொடரக்கூடாது என சுவாமிநாத சுவாமி அழுத்தமாக வலியுறுத்தி வந்தார். இதற்கு முன்பு திருமணம் ஆனவர்கள் ஆதீனங்களாக இருந்துள்ளனர் என மாகலிங்க சுவாமி பதிலுக்கு கூறி வந்தார். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆதீனத்திடம் விசாரணை செய்து அவரது விளக்கத்தை பெற்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமியை ஆதீனத்தில் இருந்து நீக்குவதாக மகாலிங்கசுவாமி நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து, மகாலிங்க சுவாமி ஆதீனத்தை விட்டு வெளியேற வேண்டும் என நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சூரியனார் கோவில் மடத்திற்கு வந்த கிராம மக்கள் சிலர், மகாலிங்க சுவாமியை சந்தித்து, ``துறவறத்தில் இருந்து இல்லறத்திற்கு சென்றதால் தாங்கள் ஆதீனமாக நீடிக்க வேண்டாம். நீங்கள் மடததை விட்டு வெளியேற வேண்டும்” என்றனர்.

மூடப்பட்ட மடம்

அப்போது, அவர்களிடம் பேசிய மகாலிங்க சுவாமி ``அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கலாம். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்” என்றதாக தெரிகிறது. இருப்பினும் கிராம மக்கள் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து, மகாலிங்க சுவாமியை மடத்திலிருந்து வெளியேற்றி விட்டு மடத்தை பூட்டு போட்டு பூட்டினர்.

பாதுகாப்புக்கு வந்த போலீஸாரும், ``நீங்கள் மடத்தில் இருப்பதை விரும்பாத மக்கள் உங்கள் மீது கொந்தளிப்பில் உள்ளனர். நீங்கள் இங்கிருந்து கிளம்புவது தான் நல்லது” என்றனர். ``அறநிலையத்துறை அதிகாரிகள் வரட்டும் முறைப்படி ஒப்படைத்து விட்டு செல்கிறேன்” என்றார் மகாலிங்க சுவாமி.

ஆனாலும் போலீஸார் அவசரப்படுத்த, மடத்திலிருந்து கிளம்பிய ஆதீனம் சூரியனார் கோவில் பஞ்சாயத்து போர்டு வாசலில், உட்கார்ந்தார். அவருடன் ஸ்ரீ கார்யம் பரமானந்தம், சச்சிதானந்தம் சுவாமிகள் ஆகியோர் இருந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த டி.எஸ்.பி.க்கள் கீர்த்தி வாசன், ராஜூ தலைமையில் வந்த போலீஸார் கிராம மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது ஒரு தரப்பினர் ஆதீனம் மீண்டும் மடத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் இனி மடத்திற்க்குள் அவர் வரக்கூடாது என்றும் சொல்லினர். இதனால், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர்கள் சண்முகம், குருமூர்த்தி, ஸ்ரீராம், ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமி

அவர்களிடம் மகாலிங்க சுவாமி, ``என்னை பதவியில் உட்கார வைத்து விட்டு எந்த உதவியும் செய்யவில்லை. நான் பலமுறை திருவாவடுதுறை ஆதீனத்துடன் சூரியனார் கோயில் ஆதீனத்தை இணைத்து விடுங்கள் என்றேன் அப்போது வரவில்லை. இப்போது ஏன் வருகிறீர்கள்?” என்றார். அதற்கு, ``நீங்கள்தான் திருவாவடுதுறை ஆதீனத்துடன் மோதல் போக்கோடு இருந்தீர்கள். தற்போது மரபு மீறி செயல்பட்டுள்ளீர்கள். தாங்கள் ஆதீனமாக இருக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றனர்.

இதையடுத்து, மகாலிங்க சுவாமி நிர்வாக பொறுப்புகளை இந்து சமய அறிநிலையத்துறையை சேர்ந்த கதிராமங்கலம் ஆய்வாளர் அருணாவிடம் கடிதம் மூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர் கிளம்பிய ஆதீனம் அறநிலையத்துறை தரப்பில் ஏற்பாடு செய்த இடத்தில் தங்குவதற்கு சென்றார். இதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மகாலிங்க சுவாமி கூறுகையில், ``மடத்தின் நிர்வாக பொறுப்பு தற்பொழுது பட்டீஸ்வரம் கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ம்டத்திலிருந்து கிளம்பிய ஆதீனம்

ஆதீனமாக இருந்து நான் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தபணியிலிருந்து என்னை நீக்கவில்லை. நிர்வாக பொறுப்பை மட்டும் தான் கொடுத்திருக்கோம். ஆக்கிரமிப்பில் இருந்த மடத்தின் சொத்துக்களை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். அதன் விளைவு தான் இது. நான் திருமணம் செய்து கொண்டது தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு முன்னால் இருந்த சந்நிதானங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் அதனால் நானும் திருமணம் செய்தேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவாரஸ்யங்கள்..!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோருக்கு அங்கு செயல்படும் தபால் நிலையம் பற்றி தெரிந்திருக்கும். சபரிமலையில் 1963-ம் ஆண்டு தபால் நிலையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது. மாளிகப்புறம் சன்னிதானத... மேலும் பார்க்க

நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album

நெல்லை பொதிகை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணி... மேலும் பார்க்க

'1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்' - தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும... மேலும் பார்க்க

சபரிமலை நடை திறப்பு: ``இது மக்களுக்கு சேவை செய்யும் பணி..'' - போலீஸாருக்கு டிஜிபி அறிவுரை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறப்புமண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஐயப்ப சுவாமி கோயில் திருநடையை ... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்..!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

கார்த்திகை திருநாள்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளிர இருக்கும் 3000 மண் விளக்குகள் | Photo Album

கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்... மேலும் பார்க்க