செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பழைய கண்ணிவெடி பாதுகாப்பாக அகற்றம்

post image

ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் புல்புர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பழைய கண்ணிவெடியை கண்டுபிடித்தனர்.

பின்னர் அதை பத்திரமாக பாதுகாத்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

வடக்கு கலிபோர்னியாவைத் தாக்கிய புயல்! கனமழை, கடும் பனிப்பொழிவு!

தொடர்ந்து அந்த கண்ணிவெடியை வெள்ளிக்கிழமை வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயலிழக்கச் செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது கண்ணிவெடி மூலம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்! ரூ.3.8 கோடி மோசடி! மக்களே எச்சரிக்கை!!

மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 77 வயது பெண்மணியை ஏமாற்றி, ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.3... மேலும் பார்க்க

அமித் ஷா, மோடியின் அடிமைகள் ஷிண்டே, அஜித் பவார்! சஞ்சய் ரெளத்

ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகளாக உள்ளதாக சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா... மேலும் பார்க்க

மும்பை 26/11 தாக்குதல்... பலியான வீரர்களுக்கு நினைவஞ்சலி!

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இன்று தலைவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல்மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம... மேலும் பார்க்க

ஹேர் டிரையர் வெடித்த சம்பவத்தில் திடீர் திருப்பம்? விபத்தல்ல கொலை முயற்சி!

பாகல்கோட்: கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில், ஹேர் டிரையர் வெடித்துச் சிதறியதில், பெண்ணின் கை விரல்கள் துண்டான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அது விபத்தல்ல என்றும், கொலை முயற்சி என்பதும் தெரியவந்துள்... மேலும் பார்க்க

சபரிமலையில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளத்தில் 8 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(நவ. 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ள... மேலும் பார்க்க

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவி அரசியலமைப்பு! ராகுல் காந்தி

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்... மேலும் பார்க்க