செய்திகள் :

‘ஒரே மேடையில் ஸ்டாலினும், ராமதாஸுமா?’ - பரவிய தகவலும் உண்மை நிலவரமும் என்ன?!

post image

முதல்வர் ஸ்டாலின் வரும் 29-ம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க விழுப்புரம் செல்லவுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அந்த 21 பேரின் குடும்ப உறுப்பினர்களுடன், பாமகவைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரும் கலந்துகொள்ள அழைப்பு விடுதிருப்பதாக திமுக அமைச்சர் பொன்முடி கூறியதாகச் செய்திகள் வெளியாகின.

ஆலோசனை கூட்டம்

உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விழுப்புரம் திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். "முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் வரவுள்ள நிலையில் அவரை வரவேற்பது தொடங்கி என்ன என்ன திட்டம் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழுப்புரம் வரும் முதல்வர் சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு யாரை அழைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையில் நிர்வாகிகள் சிலர் பாமகவை நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை அழைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு மேடையிலிருந்து பொன்முடி, அந்த முடிவையெல்லாம் தலைமை எடுத்துக்கொள்ளும் என்று சொல்லி அப்போதே பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்ததாகக் கூட்டத்தில் மற்ற வரவேற்பு குறித்து ஆலோசனைகள்தான் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததும் அங்குள்ள அறையில் மூத்த நிர்வாகிகளுடன் பொன்முடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒருசில பத்திரிகை நிருபர்களும் உடனிருந்தார்கள்.

ஆலோசனை கூட்டம்

மீண்டும் நிகழ்ச்சிக்கு ராமதாஸை அழைப்பது குறித்து பேச்சு வந்தது. `நீங்கச் சொன்னா கூப்டுடாலாம்’ என்று பேச்சுவாக்கில் கூறினார் அமைச்சர். அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் செய்தியாக மாற்றிவிட்டார்கள். மற்றபடி அங்கு எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இது அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும். இதுகுறித்து செய்தி வெளியானதும் அமைச்சர் தரப்பில் நடந்த விவகாரம் குறித்து விளக்கமும் கொடுத்துவிட்டார். விளையாட்டுக்குப் பேசிய விஷத்தைக் கூட்டணியா என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படி எந்த விவாதமும் அங்கு நடைபெறவில்லை என்பதே உண்மை" என்றார்கள் விரிவாக.

இதனிடையே அதானியுடன் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நிகழ்த்தியதாக வெளியான தகவல் குறித்து முதல்வர் விளக்க வேண்டும் என ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்” என சொன்னது சர்ச்சையாகியுள்ளது. பாமக உள்ளிட்ட கட்சிகள் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

`திமுக கவுன்சிலர்கள் ஆதிக்கம்; பணி செய்யவே முடியலை'- பேரூராட்சி தலைவி போலீஸில் புகார்; என்ன நடந்தது?

மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று தன்னை சாதி ... மேலும் பார்க்க

Noise Bombing: `ஒலி' தாக்குதல்... புது முறையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் வட கொரியா!

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே மோதல் பல காலமாகவே நிகழ்ந்து வருகிறது. மேலும் மோதல் கொண்ட இரு நாட்டிற்கு இடையே உள்ள எல்லையில் பதற்றம் மேலோங்கி இருக்கும்.வட கொரியா, தென் கொரியாவைத் தொடர்ந்து பல வகைக... மேலும் பார்க்க

`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!' - புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தி... மேலும் பார்க்க

TVK: `விஜய் கட்சியில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்?' - பரவிய தகவலும் விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க நட்சத்திர பேச்சாளராக பிரபலமான நாஞ்சில் சம்பத் பின்னர் அ.தி.மு.க-வுக்குச் சென்றார். தொடர்ந்து... மேலும் பார்க்க

Seeman: "அதானி மீது பாயாமல், ஐயா ராமதாஸ் மீது பாய்வதா?" - முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் ராமதாஸ் அதானி நிறுவன ஊழல் விவகாரம் குறித்து விமர்சித்தது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு ... மேலும் பார்க்க

டிசம்பர் 2... நாள் குறித்த தேர்தல் ஆணையம் - தப்புமா இரட்டை இலை?

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதில், "கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில், அ.தி.மு.க-வ... மேலும் பார்க்க