செய்திகள் :

பானிபூரி - பெர்த் டெஸ்ட்: கடந்தகால வாழ்க்கையினால் பிறந்த நம்பிக்கை..! ஜெய்ஸ்வால் பேட்டி!

post image

இந்தியாவின் இளம் (22) அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 டெஸ்ட்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 58 உடன் சிறப்பாக விளையாடி வருகிறார்.

11 வயதில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு அஜாத் மைதீன் ரயிலில் பயணித்து ஆடுகளத்தின் தயாரிப்பாளர்களுடன் டென்ட்டில் வாழ்ந்து வந்தார். இரவில் பானிபூரி விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் பேட்டியில் கூறியதாவது:

எந்தவிதமான சூழ்நிலையில் இருந்தாலும் திரும்பிவர என்னுடைய கடந்த வாழ்க்கை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. நான் எப்போதும் போராட விரும்புகிறேன். போராட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறேன், போராட்ட களத்தில் இருக்கவே விரும்புகிறேன். போராட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கவும் அதில் வெற்றி பெறவும் விரும்புகிறேன்.

என்னுடைய இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த வாழ்க்கைக்காக நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னைப் பற்றியும் என்மீதான நம்பிக்கையும் பல நேரங்களில் என்னுடைய உணர்ச்சிகள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டுமெனவும் கற்றுக்கொள்ள என் வாழ்க்கை உதவியது.

நான் எனக்குப் பிடித்ததை செய்கிறேன். இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. கடவுளுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து பந்துகளுடனும் இதை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

சதமடித்து கொண்டாடியது சற்று வித்தியாசமாக இருந்தது. நான் என் மனதில் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் எனப் பலதும் நினைப்பேன். திடீரென அதெல்லாம் நடந்தால் நான்தான் இதைச் செய்தேனா என ஆச்சரியப்படுவேன். அதனால் அப்படி கொண்டாடுவேன். அந்தக் கணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்.

எனது ஆதரவாளர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் எனது முத்தங்கள். நான் எனது குடும்பத்துக்கு வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு பேசினேன். எனது சகோதரர் எப்போதும் கிரிக்கெட் குறித்து பேசுவார் என்றார்.

இரண்டாவது டெஸ்ட் வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

திருப்தியான ஏலம்: 6ஆவது கோப்பையை வெல்வோம்..! ஆகாஷ் அம்பானி நம்பிக்கை!

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன் தினம் (நவம்பர் 24) தொடங்கி, நேற்றுடன் (நவம்பர் 25) நிறைவடைந்தது. இரண்டு நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் வீரர்கள் பலரும் கோடிக்கணக்கா... மேலும் பார்க்க

அதிக விலைக்கு ஏலம்போன டாப் 10 வீரர்கள்; முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்களில் முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள் உள்ளனர்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன் தினம் (நவம்பர் 24) தொடங்கி, நேற்றுடன் (நவம்ப... மேலும் பார்க்க

ஐபிஎல் மெகா ஏலம்: 10 அணிகளின் வீரர்களும், ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையும்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களுக்கான அணியை உருவாக்கியுள்ளனர்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன் தினம் (நவம்பர் 24) தொடங்கி, நேற்றுடன் (நவம்பர... மேலும் பார்க்க

ஐபிஎல் வரலாற்றில் முதல் பழங்குடியின வீரர்! ஜார்க்கண்ட் கிறிஸ் கெயில்! யார் இந்த ராபின் மின்ஸ்?

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவ.24, 25 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளுக்கு 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக லக்னௌ அணி... மேலும் பார்க்க

சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி

சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் நட்சத்திர வீரராக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது... மேலும் பார்க்க

ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன சச்சின் டெண்டுல்கர் மகன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரி... மேலும் பார்க்க