செய்திகள் :

தனுஷ் - நயன்தாரா மோதல் ஆர்வமாக இருந்தது: பார்த்திபன்

post image

நடிகர் பார்த்திபன் தனுஷ் - நயன்தாரா பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா காலத்தின்போது சினிமா படப்படிப்பு கட்டணத்தை அரசு உயர்த்தியது. இயக்குநர் பாக்கியராஜ் முதலமைச்சரை சந்தித்து கட்டணத்தை குறைக்குமாறு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சினிமா படப்பிடிப்பிற்கு 22 ஆயிரத்திலிருந்து 17,000 ரூபாயாகவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்திருந்த இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணங்களை குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் ,சினிமா படப்பிடிப்பு கட்டணங்களைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபன், சினிமா படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்ததற்கு முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்ததாகவும் சினிமா கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகிறார் கமல் ஹாசன்!

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், தனுஷ், நயன்தாரா மோதல் என்பது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பது போன்று ஆர்வமாக இருந்ததாகவும், சினிமா துறையில் விவாகரத்து அதிக அளவில் பெருகி வருவதற்கு விவாக வருடம் என்பதை விவாகரத்து வருடமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த பார்த்திபன், ஏ. ஆர். ரஹ்மான் உலகில் மிகச் சிறந்த மனிதர் அவருடைய குடும்ப விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்தி இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து, அது வருத்தமும் அளிக்கிறது என்றார்.

மேலும், நடிகர் விஜய் குறித்த அந்த கேள்விக்கு, விஜய் அரசியல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் மாநாடு பிரமாதமாக இருந்தது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட பார்த்திபன், திமுகவை விஜய் எதிர்ப்பதுதான் சரியான விஷயம். ஏனென்றால், எம். ஜி. ஆர். போன்றவர்கள் ஆளுங்கட்சியை எதிர்த்துதான் அரசியல் செய்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் கதாநாயகனாக வர முடியும் என்றார்.

சினிமா உலகில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளது. எப்போதும் ஆண்கள்தான் பலவீனமானவர்கள், பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள்தான். பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை, அவர்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த இரண்டாவது சுற்று!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடான இரண்டாவது சுற்றை டிரா செய்தார் குகேஷ்.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சிங்கப்பூரில் நேற்று (நவம்பர் 25) தொடங்கியது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பின்... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: சமனில் முடிந்த 2ஆவது சுற்று..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் போட்டி சமனில் முடிவடைந்தது.நடப்பு சாம்பியன் என்ற முறையில் லிரென் இந்தப் போட்டிக்கு ந... மேலும் பார்க்க

படப்பிடிப்பை முடித்த கஜோல்..! நெகிழ்ச்சியான பதிவு!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே' திரைப்படம் இந்தியாவில... மேலும் பார்க்க

அமரனை வாழ்த்திய விஜய்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி ... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வாழை திரைப்படத்தின் மிகப்பெரிய வணிக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை... மேலும் பார்க்க

மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகிறார் கமல் ஹாசன்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் நிலையில், அடுத்த சீசனை மீண்டும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் எனக் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியி... மேலும் பார்க்க