அரசியலமைப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை: ஜெ.பி. நட்டா
ஆட்சியில் இருந்தபோதுகூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உணர்வுப்பூர்வமாக மதிக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (நவ. 26) விமர்சித்தார்.
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, தில்லி பாஜக தலைமையகத்தில் பேசிய ஜெ.பி. நட்டா, அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இதன் உருவாக்கத்தில் பி.ஆர். அம்பேத்கரின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, அரசியலமப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75ஆம் ஆண்டில், இதனை உருவாக்கிய அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.