செய்திகள் :

பின்வாங்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்: சட்ட, நிதி நெருக்கடியில் அதானி குழுமம்!

post image

மும்பை: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாக அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு காரணமாக சர்வதேச முதலீடுகள் ரத்து செய்யப்பட்டு, அதானி குழுமம் சட்ட மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, அதானி குழும நிறுவனங்களில் மேற்கொள்ளவிருந்த கூடுதல் முதலீட்டு நடவடிக்கைகளை முன்னணி பிரெஞ்ச் எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜீஸ் நிறுத்திவைத்திருக்கிறது.

பாரிஸிலிருந்து இயங்கி வரும் நிறுவனமானது, அதானி குழுமத்தின் ஓரிரு நிறுவனங்களின் கணிசமானப் பங்குகளை கொண்டிருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், டோட்டல் எனர்ஜீஸ் எந்த வடிவிலும் ஊழலை எதிர்க்கிறது. இது அதானி க்ரீன் எனர்ஜி அல்லது அது தொடர்பான நிறுவனங்களைக் குறைவைத்து சொல்லப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அதானி குழும தலைவர் கௌதம் அதானி, அதானி க்ரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... எதற்காக வழக்குரைஞர்கள் போராட்டம்?

இந்த சம்பவம் குறித்து டோட்டல் எனர்ஜிஸ் எதையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால், அதானி க்ரீன் எனர்ஜி குழுமத்தின் சிறிய பங்குதாரர்களின் நலன் மட்டுமே மிக முக்கியம் என்றும் கூறியிருக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனத்தில், டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனம் மேற்கொள்ளவிருந்த 50 பில்லியன் டாலர் பசுமை ஹைட்ரோஜன் முன்னெடுப்புத் திட்டத்தில் இணையும் முயற்சியை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் மூலதனம் திரட்டியதாக, அமெரிக்க நீதிமன்றத்தில், கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஏராளமான முதலீட்டாளர்களும், தொழில் கூட்டாளிகளும் வணிகத்தைத் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறார்கள் என்கின்றன உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்.

அதுமட்டுமல்லாமல், கௌதம் அதானியுடன் தொழிலில் இணைந்திருக்கும் உலகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் மீதும் ஊடக வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. ஆனால், வழக்கில் கூறப்பட்டிருப்பது போன்ற எந்த தவறையும் தங்கள் நிறுவனம் செய்யவில்லை என்று அதானி குழுமும் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2023ஆம் ஆண்டு ஹிண்டர்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை விடவும், தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு சற்று மிகவும் தீவிரமானது.

ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வசம் உள்ள அதானி குழும நிறுவனங்களால் வழங்கப்பட்ட பல டாலர் மதிப்புள்ள பத்திரங்கள், அதன் மீது எதிர்மறை தாக்கங்களால், மதிப்பீடு கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது, அதாவது அதன் பத்திரங்கள் மதிப்பு குறைக்கப்படலாம். இதன் காரணமாக, இந்த பெருநிறுவனம் பல்வேறு நிதிசார்ந்த அபாயங்களை சந்திக்க நேரிடலாம்.

கடந்த வாரம், அதானி குழும பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்து, அதிக பங்குகள் விற்பனைக்கு வந்தது. மேலும், கென்ய அதிபர் வில்லியம் ருடோ, அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த விமான நிலையம் மற்றும் மின்துறை தொர்பான 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதையும் படிக்க.. புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்

இந்நிலையில்தான், அதானி குழுமத்தின் மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று நிரூபிக்கப்படும்வரை, டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களுடன் எந்தவிதமான முதலீட்டு திட்டங்களின்படி நிதி வழங்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று பிரெஞ்சு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதானி க்ரீன் எனர்ஜியின் 19.75 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கிறது பிரெஞ்சு ஆயில் நிறுவனம். மேலும், அதானி க்ரீன் நிறுவனப் பங்குகள் 50 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது. இவை திங்களன்று 2.4 சதவீத சரிவைக் கண்டன.

அதானி குழுமத்துடன் இணைந்து இலங்கை துறைமுகத்தை மேம்படுத்தும் 553 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் அறிவித்துவிட்டது.

அண்மையில் அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு குறித்து நன்கு அறிந்திருக்கிறோம். அதனைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன வழக்கு?

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய சூரிய எரிசக்தி கழக நிறுவனத்துக்கு (எஸ்இசிஐ) 8,000 மெகாவாட் சூரிய மின்சக்தியை விநியோகிக்கும் ஒப்பந்தப்புள்ளி, தொழிலதிபா் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில், உற்பத்தி சாா்ந்த திட்டத்தின் கீழ் எஸ்இசிஐயுடன் தமிழ்நாடு, சத்தீஸ்கா், ஆந்திரம், ஒடிஸா மற்றும் ஜம்மு-காஷ்மீா் மின் விநியோக நிறுவனங்கள் மின் விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதற்காக அரசு அதிகாரிகளை பலமுறை அதானியே தனிப்பட்ட முறையில் நேரடியாக சந்தித்தாா்.

12,000 மொகாவாட் சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. இந்நிலையில், அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டது.

இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கெளதம் அதானி, சாகா் அதானி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறியதாக அந்நாட்டு பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒடிசாவில் 40 யானைகள், 5 சிறுத்தைகள் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 40 யானைகள், 5 சிறுத்தைகள் மற்றும் 200 வனவிலங்குகள் பலியானதாக இன்று மாநில சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுசூழ... மேலும் பார்க்க

அரசியலமைப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை: ஜெ.பி. நட்டா

ஆட்சியில் இருந்தபோதுகூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உணர்வுப்பூர்வமாக மதிக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (நவ. 26) விமர்சித்தார். நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம்; மீண்டும் வாக்குசீட்டு முறை வேண்டும்! - கார்கே

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட... மேலும் பார்க்க

பாலத்திலிருந்து கார் விழுந்து 3 பேர் பலியான விபத்து: கூகுள் மேப்ஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் பலியான விபத்தில் கூகுள் மேப்ஸ் அதிகாரி உள்பட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எ... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் 2வது நாளான இன்று இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வணிகம் தொடங்கினாலும், புதிய முதலீடுகள் இல்லாததால் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 105 புள்... மேலும் பார்க்க