செய்திகள் :

Seeman: "அதானி மீது பாயாமல், ஐயா ராமதாஸ் மீது பாய்வதா?" - முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்

post image

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் ராமதாஸ் அதானி நிறுவன ஊழல் விவகாரம் குறித்து விமர்சித்தது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று பதிலளித்தார்.

இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக, பாஜக கட்சித் தலைவர்கள் ஸ்டாலினுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் குரலெழுப்புகின்றனர். இந்த நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஸ்டாலினுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

சீமானின் அறிக்கை கூறியதாவது:

‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன ஐயா ராமதாஸ் மீது பாய்வதா?

திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்குமான உறவு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கையை முன்வைத்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐயா ராமதாஸ் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

MK Stalin

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், சமூக நீதிக்காகப் பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ஐயா ராமதாஸ் அவர்களைச் சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகமாகும். முதல்வர் ஸ்டாலினின் திடீர் கோபத்திற்குக் காரணமென்ன? அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ஐயா ராமதாஸ்? அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாகப் பதற்றமடைவதேன்? இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியைச் சந்தித்தீர்களா? எனும் கேள்விக்கு, ‘ஆம்! இல்லை!’ எனும் பதிலைக் கூறாது, ‘அவருக்கு வேறு வேலையில்லை’ எனக் கூறி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுதானா? பதில் சொல்ல நேர்மையற்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேள்வி கேட்ட ஐயா ராமதாஸ் அவர்களை நோக்கி, ‘வேலையில்லை’ எனப் பாய்வது அரசியல் அறம்தானா?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தாரே ஐயா ஸ்டாலின், அப்போது வேலையில்லாதுதான் அறிக்கைகளை விடுத்தாரா? “எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்” எனக் கேட்டாரே, அப்போது வேலையில்லாதுதான் அரசியல் செய்தாரா?

ramadoss

அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இருக்கிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இப்போதுவரை வாய்திறக்க மறுப்பதேன்? அதானி இலஞ்சம் கொடுத்தாரெனும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? இல்லை! மறுக்கிறீர்களா? ஏற்கிறீர்களென்றால், அதானி குழுமத்திடமிருந்து தமிழ்நாட்டில் இலஞ்சம் வாங்கியது யார்? பதில் சொல்லுங்கள் முதல்வரே!

ஐயா ராமதாஸ் அவர்கள் கூறியதுபோல, அதானியை ரகசியமாக இல்லத்தில் சந்திக்க வேண்டிய தேவையென்ன வந்தது? “அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் ஏதும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடவில்லை” என விளக்கம் கொடுக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டதாக யாருமே கூறவில்லையே! இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி மையத்திடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டதே, அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துதான் என்பதுதானே குற்றச்சாட்டு. அதற்கு திமுக அரசின் கருத்தென்ன?

சீமான்

இவ்விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் மௌனத்துக்கானக் காரணத்தை நாடும், ஏடும் அறியும். மோடியின் அரசியலை எதிர்ப்பதாகக் கோரும் முதல்வர் ஸ்டாலினும் இச்சிக்கலில் அமைதி காப்பதேன்? பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி, நாளும் வாய்ப்பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் அடக்கி வாசிப்பதேன்? ‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாய வேண்டிய முதல்வர் ஸ்டாலின், உண்மையைச் சொன்ன ஐயா ராமதாஸ் மீது பாய்வதன் அரசியலென்ன?

அதானியுடன் பாஜக அரசு நேரிடையான உறவில் இருக்கிறதென்றால், திமுக அரசு கள்ள உறவில் இருக்கிறதென்பதைத்தானே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கெளதம் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டுமெனவும், ஐயா ராமதாஸ் அவர்கள் குறித்தான பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

Noise Bombing: `ஒலி' தாக்குதல்... புது முறையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் வட கொரியா!

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே மோதல் பல காலமாகவே நிகழ்ந்து வருகிறது. மேலும் மோதல் கொண்ட இரு நாட்டிற்கு இடையே உள்ள எல்லையில் பதற்றம் மேலோங்கி இருக்கும்.வட கொரியா, தென் கொரியாவைத் தொடர்ந்து பல வகைக... மேலும் பார்க்க

‘ஒரே மேடையில் ஸ்டாலினும், ராமதாஸுமா?’ - பரவிய தகவலும் உண்மை நிலவரமும் என்ன?!

முதல்வர் ஸ்டாலின் வரும் 29-ம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க விழுப்புரம் செல்லவுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 21 சமூ... மேலும் பார்க்க

`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!' - புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தி... மேலும் பார்க்க

TVK: `விஜய் கட்சியில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்?' - பரவிய தகவலும் விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க நட்சத்திர பேச்சாளராக பிரபலமான நாஞ்சில் சம்பத் பின்னர் அ.தி.மு.க-வுக்குச் சென்றார். தொடர்ந்து... மேலும் பார்க்க

டிசம்பர் 2... நாள் குறித்த தேர்தல் ஆணையம் - தப்புமா இரட்டை இலை?

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதில், "கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில், அ.தி.மு.க-வ... மேலும் பார்க்க

EPS-ஐ பதம் பார்க்கும் அரசியல் கத்திகள்...15 மாத பரீட்சை! | Elangovan Explains

இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா, அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாகவும் தன் அரசியல் எதிர்காலத்துக்காக சில நகர்வுகளை எடப்பாடி தீவிரப் படுத்துகிறார் ஆனாலும் கள ... மேலும் பார்க்க