அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை!
ரூ. 30.27 கோடியில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்!
பதிவுத்துறை சார்பில் ரூ.30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள
17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 7 பதிவு மண்டலங்களில் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்
2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, மதுரை மாவட்டம் – கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் – முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் – குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம் - வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம் - மங்கலம்பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி;
கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் – திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம் - திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் திறப்பு
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி, மன்னார்குடி – ஹரித்ராநதி கோயில் குளம் ஆகியவை 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.