செய்திகள் :

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை! - மத்திய அரசு பதில்

post image

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது. தமிழ்நாடு வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மாநில அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா, மக்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் கூறியுள்ளது.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும்.

எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை எனக் கூறியுள்ளது.

ரூ. 30.27 கோடியில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்!

பதிவுத்துறை சார்பில் ரூ.30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதி... மேலும் பார்க்க

சக்திகாந்த தாஸ் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நெஞ்செரிச்சல் காரணமாக, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 26) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், கோயம்பேடு, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

அரசியலமைப்பு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்பு!

அரசியலமைப்பு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான நவ. 26 ஆம் தே... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

ராஜிநாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா செய்துள்ளார். மேலும் பார்க்க