பானிபூரி - பெர்த் டெஸ்ட்: கடந்தகால வாழ்க்கையினால் பிறந்த நம்பிக்கை..! ஜெய்ஸ்வால்...
மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து: கல்வித்துறை இயக்குநர்
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகறிது.