Basics of Share Market 38: `இதுவா... அதுவா' - மியூச்சுவல் ஃபண்டில் எந்த ஆப்ஷன் நல்லது?
நேற்றைய அத்தியாயத்தில் 'செக்டார் ஃபண்டா, டைவர்சிஃபைடு ஃபண்டா' எது நல்லது என்று பார்த்தோம். அதில் டைவர்சிஃபைடு ஃபண்ட்டில் ரிஸ்க் குறைவு என்று பார்த்திருந்தோம்.
புதிய முதலீட்டாளர்களாக இருந்தாலும், சற்று ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்கள் டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் 80 சதவிகிதமும், ஃபோகஸ்டு ஃபண்டுகளில் 20 சதவிகிதமும் முதலீடு செய்து பாருங்கள். ஆனால், ஃபோகஸ்டு ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் தான்... வருமானமும் அதிகம். கூடுதலாக, நமது மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் இந்த ஃபண்டுகளை நிர்வாகிப்பது சற்று ஈசி. மேலும், நாம் சந்தையில் உள்ள ரிஸ்குகளையும் தெரிந்துகொள்ள இது கொஞ்சம் உதவியாக இருக்கும்.
அடுத்ததாக, குரோத் ஆப்ஷனா...டிவிடெண்ட் ஆப்ஷனா என்பதைப் பார்ப்போம்.
டிவிடெண்ட் ஆப்ஷன் என்றால் நீங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்த நிறுவனத்தின் லாபப் பங்கு நமக்குக் கிடைக்கும். கடைசி, பணம் எடுக்கும்போது நம் முதலீடு செய்த தொகை, அது வளர்ந்த தொகை என குறிப்பிட்ட தொகை நம் கையில் கிடைக்கும்.
குரோத் ஆப்ஷன் என்றால் இடையில் எந்தத் தொகையும் இல்லாமல், கடைசியாக நம் முதலீட்டை எடுக்கும்போது ஒரு பெரிய தொகை நம் கையில் இருக்கும். அது டிவிடெண்ட் ஆப்ஷனில் கிடைக்கும் தொகையைவிட, அதிகமாக இருக்கும்.
அதனால், கடைசியில் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் குரோத் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
நாளை: 'ஆக்டிவ் ஃபண்டா... பேசிவ் ஃபண்டா' - எது முதலீட்டிற்கு ஏற்றது?!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...