செய்திகள் :

Basics of Share Market 37: 'எந்த ஃபண்டை தேர்ந்தெடுக்க வேண்டும்?!' - மியூச்சுவல் ஃபண்ட் டிப்ஸ்

post image
என்னடா இது... இதுவரை பங்குச்சந்தை பற்றி சொல்லி வந்தவர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய சொல்கிறாரே... மியூச்சுவல் ஃபண்டில் எதில் முதலீடு செய்ய வேண்டும்... அது பாதுகாப்பானதா போன்ற கேள்விகள் எழலாம்.

நாம் முந்தைய ஒரு அத்தியாயத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சொல்லியிருப்போம். அதாவது நாமே எதற்கு... எப்போது... எந்த பங்கில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தேடி ஆராய்ந்து முதலீடு செய்யாமல், நமக்கு பதில் சந்தையை நன்கு புரிந்த... இதற்கென தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் நமக்கான பங்கை தேர்ந்தெடுத்து நாம் கொடுக்கும் பணத்தை அதில் முதலீடு செய்வது தான் மியூச்சுவல் ஃபண்ட். பங்குச்சந்தையைவிட, இது புதிய முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பானது.

எஸ்.ஐ.பி முறை...

இருந்தும், டிஸ்ட்ரிபியூட்டர் சொன்னாலும், எந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கான கைட் இதோ...

புதியவர்கள் எடுத்த உடனேயே மொத்த முதலீட்டில் ஈடுபடாமல், சந்தை என்றால் என்ன என்பது பிடிப்படும் வரை, சந்தை மீது நம்பிக்கை ஏற்படும் வரை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். அதற்கு பிறகும், எஸ்.ஐ.பி முறை நல்லது தான்.

எஸ்.ஐ.பி முறை என்றால் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது தான் எஸ்.ஐ.பி முறை.

செக்டார் ஃபண்ட் (துறை சார்ந்த பங்குகள்), டைவர்சிஃபைடு ஃபண்ட் (அனைத்து துறைகளும் கலந்த ஃபண்டுகள்) - இதில் புதிய முதலீட்டாளர்கள் டைவர்சிஃபைடு ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. துறை சார்ந்த ஃபண்டில் முதலீடு செய்யும்போது, அந்தத் துறை எவ்வளவு காலத்திற்கு நல்ல நிலையில் செல்லும்... அந்தத் துறை எப்படிப்பட்டது என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், டைவர்சிஃபைடு ஃபண்டில் இந்தப் பிரச்னை கிடையாது. அனைத்து துறைகளும் கலந்து இருக்கும். ஒரு துறையின் நிலை சற்று தடுமாறினாலும், இன்னொரு துறை சரி செய்துவிடும். அதனால் செக்டார் ஃபண்டை விட, டைவர்சிஃபைடு ஃபண்ட் தான் சற்று ரிஸ்க் குறைவானது.

இது தவிர...

இது தவிர, மல்ட்டிகேப் ஃபண்டுகள் (லார்ஜ், மிட், ஸ்மால்கேப் நிறுவன என அனைத்து பங்குகளும் கலந்த ஃபண்ட்) புதிய முதலீட்டளர்களுக்கு நல்ல சாய்ஸ் தான். இது குறித்துத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது சரியானதாக இருக்கும்.

இதன் தொடர்ச்சியை நாளையும் பார்க்கலாம்.

நாளை: 'இதுவா...அதுவா' - மியூச்சுவல் ஃபண்டில் இந்த ஃபண்டுகள் ரிஸ்க் குறைவு!

Basics of Share Market 36: 'பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!'

'பங்குச்சந்தை பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன்...இனி நானே நேரடியாக முதலீடு செய்யப்போகிறேன்' என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? அப்போது, உங்கள் முதலீட்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பத்து முக்கிய கோல்டன் ர... மேலும் பார்க்க

Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!

சந்தையில் நீங்களே முதலீடு செய்ய கீழே உள்ள செக்லிஸ்ட் உங்களுக்கு டிக் ஆகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.சந்தை எப்படி இருக்கிறது, எதில் முதலீடு செய்யலாம், சந்தையின் முக்கிய போக்கு என்ன போன்... மேலும் பார்க்க

Share Market: 'தொடர்ந்து இறங்குமுகம்' - முதலீடு செய்யலாமா, காத்திருக்கலாமா? - நிபுணர் சொல்வதென்ன?

செப்டம்பர் இறுதி முதல் பங்குச்சந்தை ஒரு சில தினங்களைத் தவிர இறங்குமுகமாகவே இருந்தது...இருக்கிறது. இதனால், 'இப்போது முதலீடு செய்யலாமா...இல்லை, காத்திருக்கலாமா?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கே... மேலும் பார்க்க