செய்திகள் :

எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 100% வரி ரத்து; சாலை வரி, பதிவுக்கட்டணம் எதுவும் இல்லை; எந்த ஊரில்?

post image
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க என்னவெல்லாம் பண்ண முடியுமோ - எல்லாமே செய்து பார்க்கிறது அரசு. அண்மையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் 100% சாலை வரி மற்றும் பதிவுச் செலவு எதுவுமே கிடையாது என்று ஒரு மாநில அரசு அறிவித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம்தான் இப்படியொரு அதிரடி அறிவிப்பைச் செய்திருக்கிறது. காற்று மாசுவில் டெல்லி, நொய்டா, மும்பை போன்ற மாநிலங்கள் வரிசையில் தெலங்கானா வந்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாக இருக்கிறது தெலங்கானா அரசு. இதைத் தொடர்ந்துதான் இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், எலெக்ட்ரிக் வாகனச் சட்டத்தின் கீழ் இந்தப் புதிய GO (Government Order)-யை வெளியிட்டிருக்கிறார். 

எலெக்ட்ரிக் டூ-வீலர்கள், 3 வீலர்கள், கார்கள், கமர்ஷியல் பேசஞ்சர் வாகனங்கள், முக்கியமாக டேக்ஸிகள், பேருந்துகள், எலெக்ட்ரிக் ட்ராக்டர்கள் போன்ற எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்தும். மாநிலம் சார்பாக ஓடும் அரசு எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும், அதன் வாழ்நாள் முழுதும் சாலை வரி கட்டத் தேவையில்லை. இதுவே பொது நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் பெயரில் இயங்கும் எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களுக்கு, இந்த வரித் தளர்வு 2026-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை பொருந்தும். அதன் பிறகு இது நீட்டிக்கப்படுமா என்பதை அரசு இனிமேல் அறிவிக்கும். 

EV

இதற்கு முன்பு தெலங்கானாவில் சாலை வரியாக, வாகனங்களைப் பொருத்து 9% முதல் 12% வரை வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல் பதிவுக் கட்டணத்தைப் பொருத்தவரை பைக் என்றால் சுமார் 550 முதல் 650 ரூபாயும், கார் என்றால், 1,500 ரூபாய் வரையிலும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இனி இந்தச் செலவு எலெக்ட்ரிக் வாகனங்களில் இல்லை. 

தெலங்கானா அரசின் இந்தத் திட்டத்தால், ஆன்ரோட்டில் வாகனங்களின் விலை கொஞ்சம்போலக் குறையும். மாநிலத்தில் மாசு குறையுமா?

Maruti Suzuki Dzire: `இருங்க பாய்...' அசத்திய டிசையர்; சாத்தியமானது எப்படி?

முன்பெல்லாம் கூகுளில் Maruti Suzuki Dzire என்று டைப் செய்தால் Maintenance, Mileage, Service என்றுதான் வரும். ஆனால், இப்போது அப்படி இல்லை. நிலைமையே வேறு. 5 Star Rating, Safety என்றெல்லாம் வருகிறது. ‛ஏ... மேலும் பார்க்க

EICMA 2024: மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதோ!

EICMA: இத்தாலியில் நடக்கும் கார்/பைக் கண்காட்சி! மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதோ!நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் E... மேலும் பார்க்க

ஆசிரியர் பக்கம்: Marvels of Mahindra Thar Roxx ஒர்க்‌ஷாப்! நெகிழ்ச்சியில் மாணவர்கள்!

பண்டிகைக் காலப் பரவசம் காற்றை நிறைக்கும் காலம் இது. முன்பெல்லாம் தீபாவளி என்றால் புது சினிமாக்கள் ரிலீஸாகும். இப்போதெல்லாம் புதுப்புதுக் கார்கள் ரிலீசாகின்றன. உதாரணத்துக்கு கியா கார்னிவெல்லை எடுத்துக்... மேலும் பார்க்க