செய்திகள் :

Rain Alert : `சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?' - பாலசந்திரன்

post image
வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், ” தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

rain alert

டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுத்துறை மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல, நாளை மறுநாள் விழுப்புரம், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 27, 28-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Rain Alert பாலச்சந்திரன்

குமாரிகடல் மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் கடவுளுக்கு செல்லவேண்டாம்” தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

ஊட்டி பாரஸ்ட் கேட்: அபாயகரமான மரங்களை வெட்டும் பணி தீவிரம்! | Album

அபாயகரமான மரங்களை வெட்டும் பணிஅபாயகரமான மரங்களை வெட்டும் பணிஅபாயகரமான மரங்களை வெட்டும் பணிஅபாயகரமான மரங்களை வெட்டும் பணிஅபாயகரமான மரங்களை வெட்டும் பணிஅபாயகரமான மரங்களை வெட்டும் பணிஅபாயகரமான மரங்களை வெ... மேலும் பார்க்க

நீலகிரி: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; காரணத்தைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலையில் வளர்ச்சி என்ற பெயரில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளால் இயற்கை சமநிலையில் அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெர... மேலும் பார்க்க

மதுரை: மேலூரில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம்? எச்சரிக்கும் அமைப்புகள்; மறுக்கும் மாவட்ட நிர்வாகம்

மேலூர் பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள வரைபடம்இதை தடுக்க வேண்... மேலும் பார்க்க

Delhi Air Pollution: டெல்லியில் உச்சத்தில் காற்று மாசு; அரசு அலுவலகங்கள், வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

இந்திய தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறது. இன்று காலையில் டெல்லியில் AQI லெவல் 420. AQI லெவல் 100-ஐ தாண்டினாலே சுவாசிக்க உகந்த காற்று அல்ல என்று கூறப்படும் நிலையில், 400+... மேலும் பார்க்க