செய்திகள் :

வலுப்பெறுகிறது புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.!

post image

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் சின்னம் தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தூத்துக்குடி, பாம்பன், நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், சென்னை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நவ. 25 முதல் 27 வரை தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் அடுத்த 5 நள்களுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட விசைப்படகு மீனவர்கள், மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாமென மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

கனமழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அரசு தயாராக உள்ளது: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும், அரசு அதிகாரிகளும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.தமிழகத்தில் அடுத்து வரும் இரு நாள்களில்,... மேலும் பார்க்க

கேள்வி எழுப்பினால் வேறுவேலை இல்லை என சொல்வதா? அன்புமணி

தமிழக அரசு மீது எழும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினால், பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: காதலனை தேடிக்கண்டுபிடித்து கொன்ற தந்தை, மகன்!

கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக்கருதி தந்தை மற்றும் மகன் ஆகியோர் தனியார் மருத்துவமனை ஓட்டுநர் தமிழ்செல்வன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவ... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: பாலச்சந்திரன்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நேற... மேலும் பார்க்க

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,நேற்று (24.11.24) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும... மேலும் பார்க்க