நீச்சல் போட்டிகளில் 14 ஒலிம்பிக் பதக்கங்கள்! ஓய்வை அறிவித்த ஆஸி. வீராங்கனை!
நீச்சல் போட்டிகளில் 14 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்காக 14 முறை பதக்கங்கள் வென்ற ஒலிம்பிக் வீராங்கனையான எம்மா மெக்கியோன், நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மெக்கியோன் இதுவரை வென்றுள்ள 14 ஒலிம்பிக் பதக்கங்களில் 6 தங்கப்பதக்கங்களும் அடங்கும். 2022 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 7 பதக்கங்களை வென்றிடுண்ட்ர். இதுவரை நடந்த மொத்த ஒலிம்பிக் போட்டிகளையும் சேர்த்து ஒரு விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பெண் நீச்சல் வீராங்கனை 14 பதக்கங்களுக்கு மேல் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
30 வயதான மெக்கியோன் பாரீஸ் ஒலிம்பிக்கில் 4 x 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் தங்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளி அதிக தங்கப்பதக்கங்கள் வென்றவர்களில் கேட்டி லெடெக்கிக்கு அடுத்தபடியாக அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் இயன் செஸ்டர்மேன் கூறுகையில், “ஒலிம்பிக் போட்டிகளில் ஆஸ்திரேலிய வரலாற்றில் எம்மா நம்பமுடியாத ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். எம்மா ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.