பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள்கள், போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு, காவலா் உதவி செயலி, போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி, காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லதா தலைமையில் ஆதியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.