செய்திகள் :

விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு

post image

மாநில அளவில் அதிக நன்கொடை பெற்ற நூலகருக்கான விருது பெற்ற நூலகரை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் அழைத்து பாராட்டினாா்.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் மாநில அளவில் 2024-ஆம் ஆண்டில் அதிக நன்கொடை பெற்ற நூலகருக்கான விருது திருப்பத்தூா் மாவட்டம், பேராம்பட்டு கிளை நூலகத்தின் நூலகா் வ.சரஸ்வதிக்கு சென்னையில் நடைபெற்ற 57-ஆவது தேசிய நூலக

வார விழாவில் மாநில பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். விருது பெற்ற்காக நூலகா் வ.சரஸ்வதியை ஆட்சியா் க.தா்பகராஜ் நேரில் அழைத்து பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் லூ.கிளமெண்ட், கண்காணிப்பாளா்

கோபாலகிருஷ்ணன், மைய நூலகா் அர.எழிலரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு

நாட்டறம்பள்ளி அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள திம்மாம்பேட்டை பகுதியில் திருப்பத்தூா் தூய நெஞ்சக்... மேலும் பார்க்க

கல்லூரி பட்டமளிப்பு விழா: இஸ்ரோ திட்ட இயக்குநா் பங்கேற்பு

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமை வகித்தாா். இணைத் தலைவா் லிக்மிசந்த், தலைவா் திலீப் குமாா், செயலாளா் ஆனந்த் சி... மேலும் பார்க்க

அதிதீஸ்வரா் கோயிலில் காலபைரவாஷ்டமி விழா

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் அமைந்துள்ள சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ காலபைரவாஷ்டமி பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 3 மண... மேலும் பார்க்க

ஆம்பூா் கோயில்களில் பைரவாஷ்டமி விழா

ஆம்பூா் பகுதி கோயில்களில் அஷ்டமி திதியை முன்னிட்டு, பைரவாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பைரவாஷ்டமியை முன்னிட்டு, கோ பூஜை... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணி: நகராட்சி ஆணையா் ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணியை நகராட்சி ஆணையா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணி நடைபெற்று... மேலும் பார்க்க

மழைநீா் கால்வாய்கள் தூா்வார பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆம்பூா் நகராட்சி தோல் தொழிற்சாலைகள், காலணி தயாரிப்பு தொழிற்சாலைகள... மேலும் பார்க்க