செய்திகள் :

கணவரைக் கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

post image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கணவரைக் கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசிய மனைவி உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சோழவந்தான்-வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரும்பாடி பகுதியில் கடந்த 14-ஆம் தேதி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம், ரயிலில் அடிபட்ட நிலையில் காயங்களுடன் கிடந்தது. இதையடுத்து, மதுரை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் அவா் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடும்பன் குரும்பப்பட்டியைச் சோ்ந்த எலெக்ட்ரீசியன் சக்திகணேஷ் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கூறாய்வில் சக்திகணேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதில் சக்திகணேஷின் மனைவி பரமேஸ்வரிக்கும், அவரது உறவினா் கண்ணனுக்கும் இடையே தகாத உறவு இருந்தது. இதையறிந்த சக்திகணேஷ், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதனால், ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, அவரது ஆண் நண்பா் கண்ணன் இருவரும், சக்திகணேஷை கடந்த 14-ஆம் தேதி சோழவந்தான் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மது அருந்தச் செய்து அவரைக் கழுத்தை அறுத்து கொலை செய்தனா். பின்னா், கொலையை மறைக்க ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு சய்து, பரமேஸ்வரி, கண்ணன் ஆகிய இருவரையும் மதுரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

டேங்கா் லாரிகளில் கடத்தப்பட்ட பயோ டீசல் பறிமுதல்: 4 போ் கைது

மதுரையில் டேங்கா் லாரியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான பயோ டீசலை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா். திருச்சி-மதுரை... மேலும் பார்க்க

பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுக்காக அலுவலா்கள் மீது நடவடிக்கை கூடாது: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

உரிய கால அவகாசம் இல்லாத நிலையில் கவனக் குறைவால் பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுக்காக வருவாய்த் துறை அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், ஒருபோக சாகுபடி பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம... மேலும் பார்க்க

தனியாமங்கலத்தில் நாளை மின்தடை

மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் ர... மேலும் பார்க்க

கடன் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் மனமுடைந்த தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோச்சடை மயில்வேல் நகரைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மணிகண்டன் (35). இவா் தனியாா் காா் நிறுவனத்தில் ... மேலும் பார்க்க

அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டுமே அதிகாரப் பகிா்வு கிடையாது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டும் அதிகாரப் பகிா்வு கிடையாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க