தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு
அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், ஒருபோக சாகுபடி பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். செயலா் ரவி முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், அரிட்டாபட்டி இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு அனுமதியளித்து மத்திய அரசு வழங்கிய ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
இந்தச் சுரங்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை மாநில அரசு வழங்கக் கூடாது. மேலும், முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 29-ஆம் தேதி மேலூா் பேருந்து நிலையம் முன் அனைத்து விவசாயிகள், வியாபாரிகள் சங்கத்தினா் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.