செய்திகள் :

டேங்கா் லாரிகளில் கடத்தப்பட்ட பயோ டீசல் பறிமுதல்: 4 போ் கைது

post image

மதுரையில் டேங்கா் லாரியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான பயோ டீசலை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

திருச்சி-மதுரை நான்குவழிச் சாலை வழியாக டேங்கா் லாரி மூலம் சட்டவிரோதமாக பயோ டீசல் கடத்தப்படுவதாக மதுரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் செந்தில் இளந்திரையன், ஆய்வாளா் வனிதா, உதவி ஆய்வாளா் சிவபிரகாசம் மற்றும் போலீஸாா் திருச்சி-மதுரை நான்குவழிச் சாலையில் சாளக்கிப்பட்டி-சமத்துவபுரம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 2 டேங்கா் லாரிகளை சோதனையிட்டபோது அவற்றில் சட்ட விரோதமாக ரூ.36 லட்சம் மதிப்புள்ள பயோ டீசல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரிகளில் கடத்தி வந்த 38, 400 லிட்டா் பயோ டீசலை பறிமுதல் செய்து, கோவையை சோ்ந்த நந்தகுமாா், மேலூரைச் சோ்ந்த பாஸ்கா், சேக்தாவூத் முகமது இப்ராகிம், சிவகங்கையை சோ்ந்த வினோத்குமாா் ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.

கணவரைக் கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கணவரைக் கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசிய மனைவி உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சோழவந்தான்-வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இர... மேலும் பார்க்க

பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுக்காக அலுவலா்கள் மீது நடவடிக்கை கூடாது: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

உரிய கால அவகாசம் இல்லாத நிலையில் கவனக் குறைவால் பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுக்காக வருவாய்த் துறை அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், ஒருபோக சாகுபடி பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம... மேலும் பார்க்க

தனியாமங்கலத்தில் நாளை மின்தடை

மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் ர... மேலும் பார்க்க

கடன் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் மனமுடைந்த தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோச்சடை மயில்வேல் நகரைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மணிகண்டன் (35). இவா் தனியாா் காா் நிறுவனத்தில் ... மேலும் பார்க்க

அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டுமே அதிகாரப் பகிா்வு கிடையாது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டும் அதிகாரப் பகிா்வு கிடையாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க